கோவையை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் கண்ணன் என்பவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் தங்களது நிறுவனத்தின் ஜி.எஸ்.டி எண்ணை யாரோ ஒருவர் தவறாக பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் பண மோசடி செய்து வருவதாக புகார் கூறியிருந்தார். இதைடுத்து சைபர் கிரைம் போலீசார் ஐ.டி சட்டப்பிரிவு உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் நாராயணசாமி பாளையம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (47) என்பவர் பல்வேறு நிறுவனங்களின் ஜி.எஸ்.டி எண்களை வைத்து போலியான ஆவணங்களை தயாரித்து அதன் மூலம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த செல்போன், மின்னணு சாதனங்கள், ஹார்டு டிஸ்க், சிம் கார்டுகள், பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் உள்ள விசிட்டிங் கார்டு, போலி ரூபாய் நோட்டுகள், பிரிண்டர் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதே போன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/