ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தென்னிந்திய திருச்சபை பேராயர்கள் இன்று (மார்ச் 13) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 4-ம் தேதி ஆளுநர் மாளிகையில் அய்யா வைகுண்டர் 104-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. ஜி.யு.போப், கால்டுவெல் போன்றவர்கள் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவர்கள்.
நமது மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றவே, அவர்கள் எல்லாம் இந்தியா வந்தனர்" என்று கூறினார். ஆளுநரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆளுநரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய திருச்சபை பேராயர்கள் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் தெரிவித்தனர். தொடர்ந்து, தமிழகத்தில் மக்கள் வேறு வேறு மதங்களைப் பின்பற்றினாலும், அனைவரும் ஒன்றாகவே இருக்கிறோம். மதத்தை வைத்து எங்களை யாரும் பிரிக்க முடியாது என்ற கருத்தை பேராயர்கள் வலியுறுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஆளுநர் ரவியை கண்டித்து சி.எஸ்.ஐ திருச்சபை பேராயர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்: பின்னணி என்ன?
கால்டுவெல், ஜி.யு. போப் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைச்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் இதைக் கண்டித்து தென்னிந்திய திருச்சபை பேராயர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.