Advertisment

துரைமுருகனை விமர்சித்து வீடியோ; குடியாத்தம் குமரன் தி.மு.க-வில் இருந்து நீக்கம்

தி.மு.க கொள்கைபரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதமாக செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கிவைக்கப்படுகிறார் என்று தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
gudiyatham kumaran suspended from dmk, gudiyatham kumaran against duraimurugan, குடியாத்தம் குமரன், குடியாத்தம் குமரன் திமுக நீக்கம், துரைமுருகன்

குடியாத்தம் குமரன் தி.மு.க-வில் இருந்து நீக்கம்

தி.மு.க கொள்கைபரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதமாக செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கிவைக்கப்படுகிறார் என்று தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Advertisment

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குடியாத்தம் குமரன், தி.மு.க-வின் கொள்கைபரப்பு துணை செயலாளர். இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் என சரளமாகப் பேசக் கூடியவர். தி.மு.க மேடைகளில் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து திராவிட இயக்க கருத்துகளை அதிரடியாகப் பேசக் கூடியவர்.

வேலூர் மாவடத்தைச் சேர்ந்தவர் எனபதால் குடியாத்தம் குமரன் தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆதரவாளராக அடையாளம் காணப்பட்டார்.  அண்மையில், குடியாத்தம் குமரன் எதிர்க்கட்சித் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தி.மு.க கொள்கைபரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவமதிப்பு ஏற்படும் விதமாக செயல்பட்டதாகவும் கூறி அவர் தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக தி.மு.க பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கழக கொள்கைப் பரப்பு துணைச்செயலாளர் குடியாத்தம் குமரன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று அறிவித்துள்ளார்.

குடியாத்தம் குமரன் ஏற்கெனவே இதே போல, ஒருமுறை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், மீண்டும் தி.மு.க-வில் சேர்க்கப்பட்டார். தி.மு.க கொள்கைபரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன், 2-வது முறையாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு, அவர் சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களை அவதூறாகப் பேசி வீடியோ வெயிட்டுவந்தார். கட்சி கட்டுபாடுகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் மீதும் அவருடைய மகன் வேலூர் தொகுதி எம்.பி. கதிர் ஆனந்த் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறி குடியாத்தம் குமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,  “என்னை செருப்பால் அடித்தாலும் எனது கட்சி தி.மு.க தான். என்னுடைய தலைவர் ஸ்டாலின் தான். என்னுடைய வருங்கால தலைவர் உதயநிதி ஸ்டாலின்தான். எனக்கும் துரைமுருகனுக்கும் எந்த பிரச்னையும் இல்லை அவருடைய மகன் கதிர் ஆனந்த்தான் வேலூர் மாவட்டத்திலேயே பிரச்னை. துரைமுருகனின் தம்பி ஒரு பக்கம், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ஒரு பக்கம் என்று குடும்பமே கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. அமைச்சர் பி.டி.ஆர் குரலில் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துவிட்டதாக எவனோ ஒருவன் பொய்யான ஆடியோவை வெளியிட்டான். ஆனால், உண்மையில், மணல் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் 60,000 கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறார். இது பற்றிய உண்மைகளை நான் விரைவில் வெளியிடுவேன். துரைமுருகனின் பல வீடியோக்கள், தொலைபேசி உரையாடல்கள் பதிவுகள் எனிடம் இருக்கிற்து. அவற்றையெல்லாம் நான் வெளியிட்டால் பத்து நிமிடத்தில் துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி இருக்காது” என்று குடியாத்தம் குமரன் ஆவேசமாகப் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment