சென்னை - கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் மார்க்கத்தில் முக்கியமான ரயில் நிலையம் கிண்டி ரயில் நிலையம், அருகிலேயே கிண்டி மெட்ரோ ரயில் நிலையம், அதன் அருகிலேயே கிண்டி பஸ் நிலையம் என மக்கள் கூட்டம் பரபரப்பாக இருக்கும் இடம்தான் கிண்டி.
இதில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான கிண்டி ரயில் நிலையம் தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகளைக் கையாண்டு வருகிறது. அதனால், கிண்டி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதனால், கிண்டி ரயில் நிலையத்தின் புதிய நுழைவு வாயில் பகுதி குறித்த வரைபடத்தை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்களை மெம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை சென்னை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 6 கோட்டங்களில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதில், சென்னை கோட்டத்தில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள சில ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சென்னை பூங்கா, கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மற்றும் செயிண்ட் தாமஸ் ஆகிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்தது.
அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிண்டி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையின் முக்கிய இடத்தில் அமைந்துள்ள கிண்டி ரயில் நிலையத்தை மேம்பாத்துவதற்காக ரூ. 13.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கிண்டி ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை கவரும் விதமாக கிண்டி ரயில் நிலையத்தின் நுழைவு பகுதி மாற்றியமைக்கப்பட உள்ளது. ரயில் நிலையத்தின் நடைமேடைகள் மறு சீரமைக்கப்பட உள்ளது. டிக்கெட் கவுண்ட்டர் மேம்படுத்தப்பட்ட அசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வே நிர்வாகம் கிண்டி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளாக, பார்க்கிங் வசதிகள், டிக்கெட் புக்கிங் அலுவலக கட்டிடம், மேற்கூரைகள் மாற்றும் பணிகள், லிப்ட் பணிகள் ஆகியவை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், கிண்டி ரயில் நிலையத்தின் புதிய நுழைவு வாயில் பகுதி குறித்த வரைபடத்தையும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. விமான நிலைம் போல பிரம்மண்டாக இருக்கிறது.
கிண்டி ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக 3 லிப்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட இருக்கின்றன. பயணிகளின் பாதுகாப்பிற்காக, அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.