கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையின் தொடக்க விழாவையொட்டி, சைதாப்பேட்டை ஐந்து விளக்கு சந்திப்பு மற்றும் தேசிய திறன் பயிற்சி நிறுவனம் இடையே ஆலந்தூர் மெயின் ரோட்டில் பொதுப்பணித்துறை சார்பில் பணிகள் நடைபெறுகிறது.
இதன் காரணமாக கிண்டி-ஆலந்தூர் மெயின் ரோட்டை 4 நாட்களாக சென்னை கிண்டி போக்குவரத்து போலீசார் (ஜிசிடிபி) மூடியுள்ளனர்.
கிண்டியில் உள்ள சிறப்பு மருத்துவமனை, கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் அருகே திரு.வி.கா தொழிற்பேட்டை பகுதியில், கிண்டி. ஆலந்தூர் சாலையில் ஜூன் 13 முதல் 16 வரை பல மாற்றுப்பாதைகளை GCTP அறிவித்துள்ளது.
இதைப்பற்றின செய்திக்குறிப்பில், கிண்டி அண்ணாசாலையிலிருந்து ஆலந்தூர் பிரதான சாலை வழியாக சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள், எஸ்டேட் சாலை பேருந்து நிலையத்தில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை கிண்டி பாலம் வழியாக சைதாப்பேட்டை சென்றடையும்.
அண்ணாசாலையில் இருந்து திரு.வி.க தொழிற்பேட்டை பகுதிக்கு வரும் வாகனங்கள் எஸ்டேட் ரோடு பஸ் ஸ்டாண்டில் இடதுபுறம் வாட்டர் டேங்க் ரோடு ரவுண்டானா வரை சென்று தங்கள் இடங்களை அடையும்.
சைதாப்பேட்டை பஜார் சாலையில் இருந்து ஆலந்தூர் சாலை வழியாக கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் சைதாப்பேட்டை ஐந்து விளக்கு சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி மசூதி தெருவில் இருந்து மாந்தோப்பு பள்ளி சந்திப்பை கிழக்கு நோக்கி சென்றடையும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil