Advertisment

ஹரி நாடார் ரிலீஸாக வாய்ப்பில்லை? மேலும் ஒரு பகீர் மோசடி புகார்

Gujarat and Kerala business mans files case against hari nadar for 1.5cr cheating: நடமாடும் நகைக்கடை ஹரி நாடார் மீது மற்றொரு பண மோசடி புகார், கடன் வாங்கி தருவதாக ஏமாற்றியதாக வழக்கு

author-image
WebDesk
New Update
ஹரி நாடார் ரிலீஸாக வாய்ப்பில்லை? மேலும் ஒரு பகீர் மோசடி புகார்

தமிழகத்தின் நடமாடும் நகைக்கடை என்று பெயர் பெற்ற ஹரி நாடார் மீது மற்றொரு மோசடி புகார் எழுந்துள்ளது.

Advertisment

பனங்காட்டு படைக் கட்சி தலைவராக இருக்கும் ஹரி நாடார், உடல் முழுக்க கிலோ கணக்கில் நகைகளை அணிந்து வலம் வந்து பிரபலமானவர். சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப் படை கட்சி சார்பில் சுயேச்சையாக போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரங்களையும் இவர் ஆடம்பரமாகவே செய்தார். ஹெலிகாப்டரில் வந்து வாக்கு சேகரித்தது இதில் ஹைலைட் ஆன விஷயம். இந்த தேர்தலில் 37,724 வாக்குகளைப் பெற்று தமிழகத்திலே சுயேச்சை ஒருவர் அதிக வாக்கு பெற்றதை பதிவு செய்தார். அதோடு மட்டுமல்லாமல், திமுக வேட்பாளர் பூங்கோதையின் ஹாட்ரிக் வெற்றியையும் தகர்த்து விட்டார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு பெங்களூருவை சேர்ந்த வெங்கட்ராமன்  என்பவர் அளித்த  ரூ.7.2 கோடி பண மோசடி வழக்கிலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கேளரா மாநிலம் கோவளத்தில் ஹரிநாடார் கைது செய்யப்பட்டார். காவல் துறையினர் விசாரணைக்காக அவரை பெங்களூரு கொண்டு சென்றனர். தற்போது அந்த வழக்கிற்காக சிறையில் இருக்கிறார் ஹரி நாடார்.

அடுத்ததாக இப்போது, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பஷீர் என்பவரும் இணைந்து நடத்தி வரும்  ஈ.டி.எஸ் நிறுவனம் ஹரி நாடார் மீது புதிய புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்த நிறுவனம் அரபு நாடுகளுக்கு வாசனை மற்றும் பல சரக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இஸ்மாயிலின் செயலாளர் அப்துல் என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

புகாரில், ஈ.டி.எஸ் நிறுவன உரிமையாளர் இஸ்மாயிலுக்கு வங்கி ஒன்றில் 100 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக ஹரி நாடார் தெரிவித்துள்ளார். இதற்கு கமிஷனாக ரூ.1.50 கோடியை கேட்டுள்ளார் ஹரி நாடார். அதில் ரூ.1.25 கோடி ரூபாயை வங்கி மூலமும், ரூ.25 லட்சத்தை நேரடியாகவும், மார்ச் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கொடுத்துள்ளனர்.

ஹரி நாடார், இவர்களிடம் தன்னை "கேப்பிட்டல் யூபி இன்வெஸ்ட்மென்ட்" என்ற நிறுவனத்தின் ஆசியா நாடுகளுக்கான நிர்வாகி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். ஒருசில ஆவணங்களை அவர்களிடம் ஹரிநாடார் காட்டவும், உண்மை என நம்பி பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால், ரூ.100 கோடி கடன் பெற்றுத் தர எந்தவொரு நடவடிக்கையும் ஹரி நாடார் எடுக்கவில்லை.

கடன் குறித்து ஹரிநாடாரிடம் கேட்ட போது, தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறேன். தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் முடிந்த பிறகு கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். ஆனால் தேர்தல் முடிந்த பிறகும், கடன் வாங்கி தருவது குறித்து எந்தவொரு நடவடிக்கையையும் ஹரிநாடார் எடுக்கவில்லை. எனவே கொடுத்த கமிஷன் பணத்தையாவது திருப்பிக் கேட்டபோது, அதற்கும் பதில் இல்லை. இந்த நிலையில், வேறு ஒரு பண மோசடி புகாரில் கர்நாடக காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஹரி நாடார். இதனையடுத்து தங்களிடம் வாங்கிய பணத்தை பெற்று தர வேண்டும் என்று இஸ்மாயில் புகார் அளித்துள்ளார்.

கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் ஆடம்பரமான தேர்தல் பிரச்சாரங்கள் மூலம், தமிழகம் முழுவதும் பிரபலமான ஹரி நாடார், தற்போது அடுத்தடுத்த பண மோசடி புகார்களால் சர்ச்சை நாயகனாக மாறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Hari Nadar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment