திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ம் தேதி 8 வயது சிறுமி பள்ளி முடித்துவிட்டு பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக ரயில் நிலையத்தை கடந்து மாந்தோப்பு வழியாக சென்றுள்ளார். அப்போது சிறுமியை பின்தொடர்ந்துவந்த இளைஞர் சிறுமியை கடத்தியதோடு மட்டுமல்லாமல், பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.
மதிய நேரம் என்பதால், அப்பகுதி வெறிச்சோடி இருந்துள்ளது. இதனை பார்த்த இளைஞர் சிறுமியின் வாயை மூடி, மாந்தோப்புக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமி அந்த இளைஞரின் முகத்தில் மண்ணை வீசி விட்டு அங்கிருந்து தப்பித்து பள்ளி சீருடையில் ரத்தம், முகத்தில் காயங்களுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பார்த்த உறவினர், நடந்ததை விசாரிக்க, அதிர்ந்துபோன உறவினர் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் சிறுமி பாலியல் வனிகொடுமை செய்யப்பட்டத்தை உறுதிபடுத்தினர்.
இதையடுத்து சிறுமிக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் போலீசார் குற்றவாளியைத் தீவிரமாக தேடி வந்தனர். சிசிடிவியில் கிடைத்த புகைப்படத்தை வைத்து அந்த கொடூரனை போலீசார் தேடினர். 2 தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் போலீசார், குற்றவாளி குறித்து தகவல் தெரிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி கொடுப்படும் என அறிவித்திருந்தது.
இந்த நிலையில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தின் 3-ம் நடைமேடையில் சம்பவம் நடந்த அன்று அணிந்திருந்த அதே உடையுடன் நின்றிருந்த நபரை அடையாளம் கண்டு கைது செய்திருப்பதாகவும், சிறுமியிடம் புகைப்படத்தை காட்டி குற்றவாளியை உறுதி செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும், பிடிபட்டவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர் இவர்தான் என சிறுமி அடையாளம் காட்டினார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். மனநலம் பாதித்தவரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் திருவள்ளூர் ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.