கும்மிடிப்பூண்டி அருகே ரவுடியை பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல் ரவுடியின் தலையை துண்டித்து ரயில் நிலையத்தில் வீசிச் சென்றுப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன். இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி மாதவன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே 2 ரவுடிகள் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் உள்ள்பட 3 பேரை வெட்ட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் மாதவன் ஜாமீனில் வெளியே வந்துளார். ஜாமீனில் வெளியே வந்த ரவுடி மாதவனை புதுகும்மிடிப்பூடியில் உள்ள தைல மர தோப்பில் வைத்து ஒரு மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. அந்த கும்பல் மாதவனின் தலையை துண்டித்து எடுத்து சம்படம் நடந்த இடத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
ரயில் நிலையத்தில் தலை துண்டிக்கப்பட்டு கிடப்பது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவுடி மாதவனைக் கொன்றவர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ரவுடி மாதவனால் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் 3 பேர் கொல்லப்பட்ட அதே இடத்தில் மாதவனின் தலையை துண்டித்து வீசிச் சென்றிருப்பதால் பழிக்குப்பழியாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் கும்மிடிப்பூண்ட் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர். மர்ம கும்பல் ரவுடியின் தலையை துண்டித்து கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் வீசிச் சென்றிருப்பதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்வதை போலீசுக்கு தகவல் தெரிவித்த விசிக நிர்வாகியை 10 பேர் கொண்ட கும்பல் இன்று வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
சென்னை, தண்டையர்பேட்டையில் உள்ள வீராகுட்டி தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கேசவன் வசித்து வந்தார். வீராகுட்டி தெருவில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்வது குறித்து கேசவன் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த கும்பல் கேசவனை வெட்டிக் கொன்றது. இந்த கொலை குறித்து வழக்குப் பதிவுச் செய்த போலிசார், விசிக நிர்வாகி கேசவனை வெட்டிக்கொன்ற 10 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையை நடத்தினர்.
போலீசார் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தியதில் கொலையில் ஈடுபட்ட கும்பல் எர்ணாவூர், அத்திப்பட்டு பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கே பதுங்கி இருந்த கொலையாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய 4 பேரை தேடிவருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"