scorecardresearch

பாலியல் வழக்கு: அதிரடி துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை: என்ன நடந்தது?

ஸ்ரீபெரம்புதூர் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கு: அதிரடி துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை: என்ன நடந்தது?

 ஸ்ரீபெரம்புதூர் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரம்புதூர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 20 வயதான பெண், கடந்த டிசம்பர் 11-ம் தேதி இரவில் சாலையில் நடந்து சென்றபோது, அப்பெண்ணை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெம்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றாவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த  நகராஜ் மற்றும் பிரகாஷ் இந்த குற்றத்தை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

இவர்களிடத்தில் உள்ள நகை, பணம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை போலிசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் குற்றாவளிகள் தப்பிச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருவருக்கும் கால் பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளது. காஞ்சுபுரம் அரசு மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Gun shot by tn police near sriperumbudur sexual assault