/indian-express-tamil/media/media_files/6MhN2s9CV3chpqp9AAvr.jpg)
முசிறியில் சுமார் 150 கிலோ கிராம் கொண்ட அழுகிய காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் சமோசா தயாரிப்பு நிறுவனமும் தற்காலிகமாக சீல் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ஆர்.ரமேஷ்பாபு தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின் போது முசிறி கைகாட்டி ரோட்டில் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள வழக்கறிஞர், மகாலிங்கம் மற்றும் பாஸ்கர், முத்து, தமிழ்செல்வன், சக்திவேல், சுந்தரவல்லி உள்ளிட்டவரின் கடைகள், வழக்கறிஞரின் அலுவலகம் உட்பட 5 கடைகளும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக சீல் செய்யப்பட்டன.
இந்த ஆய்வின்போது 1.215 கிலோ கிராம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு மேல்நடவடிக்கைக்காக முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செந்தில்குமார் த/பெ வேலாயுதம், செந்தில் ஸ்நாக்ஸ், அண்ணா நெசவாளர் காலனி என்ற நபர் முசிறி நகராட்சி பகுதிகளுக்கு சமோசா மொத்த விற்பனை செய்வதற்கு அழுகிய காய்கறிகளை கொண்டு சமோசா செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. எனவே, சுமார் 150 கிலோ கிராம் கொண்ட அழுகிய காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் சமோசா தயாரிப்பு நிறுவனமும் தற்காலிகமாக சீல் செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்களாகிய பாண்டி, சையத் இப்ராஹிம், செல்வராஜ், மகாதேவன், அன்புச்செல்வன், வடிவேல், கந்தவேல், சண்முகசுந்தரம் ஆயுதப்படை காவலர்களும் உடனிருந்தனர். மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R.ரமேஷ்பாபு கூறுகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களோ அல்லது கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களோ அல்லது சுகாரமற்ற முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு விற்பனை செய்வது தெரிய வருமாயின் கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரியபடுத்த வேண்டும் என்றும், தகவல் அளிப்போரின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறினார்.
திருச்சி மாவட்ட புகார் எண் : 9626839595, மாநில புகார் எண் 9444042322.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us