சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏக்கள் எதிரான உரிமை மீறல் நோட்டீஸை நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து முந்தைய ஆட்சீயில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்ப அனைத்து அதிகாரமும் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் விதிகளுக்கு எதிராக செயல்படுவதை அனுமதித்தால் அது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரனமாக அமைந்துவிடும்.
மக்களின் பிரநிதிகள் அடங்கிய சட்டமன்றத்தில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். ஏற்கனவே அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சட்டமன்ற உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் மீது தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil