குட்கா வழக்கு விவகாரத்தில் சிறையில் இருக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ் நாட்டில் தடை செய்யபட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்தற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக காவல்துறை இயக்குனர் டி.கே ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
குட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி
அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ததாக ஆலை உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, இவர்களுடன் மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் மற்றும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், சிவக்குமார் ஆகியோரை சிபிஐ காவல்துறையினர் கைது செய்தனர்.
அதன் பிறகு அரசு அதிகாரிகரிகளான செந்தில் முருகனும், நவனீதிகிருஷ்ண பாண்டியனும் ஆகியோர் ஜாமின் கோரியும் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி திருநீல பிரசாத் ஜாமின் தள்ளுபடி செய்து கடந்த மாதம் உத்தரவிட்டார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த 45 நாட்களாக சிறையில் இருப்பதாலும் சிபிஐ தரப்பில் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரம் இல்லை எனவும் எனவே ஜாமீன் அளிக்க வேண்டும் என வாதிட்டார்.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை இன்னும் முடிவடைவில்லை என ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அப்போது நீதிபதி, விசாரணை முடிவடையாத நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, இருவரின் மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் குட்கா வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வரக்கூடிய சம்பத், முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் சீனிவாசன், ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் சம்பத் எதிராக இதுவரை சிபிஐ எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு இல்லாத நிலையில் முன் ஜாமின் மனு தேவையற்றது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.