முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி. ரமணா, முன்னாள் காவல்துறை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன், எஸ். ஜார்ஜ் உள்ளிட்ட 17 பேர் மீது குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லியில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு (III), சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நவம்பர் மூன்றாவது வாரத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில், மூன்று அரசு அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது சிபிஐ குற்றம் சாட்டியது.
ஜூலை 2022-ல், முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோர் மீது மீது வழக்குத் தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியது. சென்னை காவல்துறை ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற டிஜிபிகளைப் பொறுத்தவரை, 1988ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்க உரிய அதிகாரம் இருப்பதால், இந்த விவகாரம் உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு, வணிக வரி மற்றும் மத்திய கலால் துறை அதிகாரிகள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழ்நாடு காவல்துறையிடம் இருந்து விசாரணையை சிபிஐ எடுத்துக் கொண்டு, மே 29, 2018-இல் இந்த வழக்கை மீண்டும் பதிவு செய்தது.
குட்கா ஊழல் வழக்கில், தமிழக காவல்துறை, சென்னை மாநகராட்சி, உணவுப் பாதுகாப்புத் துறை, வணிகவரிப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் சில அதிகாரிகளுக்கு சென்னையில் குட்காவை இருப்பு வைப்பதற்காகவும் போக்குவரத்து மற்றும் விற்பனை செய்வதற்காக ரூ.39.91 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 2013 முதல் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2014 முதல் 2016 வரை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு, எம்.டி.எம்., பிராண்டின் குட்கா உற்பத்தியாளர்கள், குட்கா உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனையை உறுதி செய்வதற்காக பல கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஜூலை 2016 இல் குட்கா நிறுவன வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது இந்த மோசடியைக் கண்டுபிடித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்குப் புத்தகத்தை கண்டுபிடித்தனர். அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகளில் ரூ.39.91 கோடி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“