குட்கா ஊழல் விவகாரம் டி.ஜி.பி ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு : குட்கா ஊழல் ஆவணங்களை மறைத்து பதவி நீட்டிப்பினை பெற்றார் டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன் என மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை விசாரணை செய்த நீதிபதிகள், பதவி நீட்டிப்பினை வழங்கிய முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ், முன்னாள் உள்துறை செயலர் அபூர்வ வர்மா, முன்னாள் டி.ஜி.பி. அசோக் குமார் மற்றும் சசிகலா ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். ஜனவரி 2ம் தேதிக்குள் நோட்டீஸ்களுக்கு விளக்கம் தருமாறு உத்தரவு.
குட்கா ஊழல் விவகாரம் டி.ஜி.பி ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு சட்ட விரோதமானது
30/06/2017ம் அன்று ஓய்வு பெற இருந்த டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரனின் பணியை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டது உள்த்துறை அமைச்சகம். ஏற்கனவே குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரின் பதவி நீட்டிற்பு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் கதிரேசன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
விசாரணையை மேற்கொண்ட நீதிமன்றம், எதன் அடிப்படையில் அவரின் பதவி நீட்டிக்கப்பட்டது என்று தலைமை செயலாளராக பணியாற்றி வரும் கிரிஜா வைத்தியநாதனிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது அவர் டி.கே. ராஜேந்திரனுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் எதுவும் தலைமை செயலகத்தில் இல்லை என்று விளக்கம் அளித்தார்.
குட்கா ஊழல் விவகாரம் டி.ஜி.பி ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு குறித்த ஆவணங்கள் சசிகலா அறையில் சிக்கியது எப்படி ?
இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் இருக்கும் சசிகலா அறையில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அந்த அறையில் இருந்து, பணி நியமனம் தொடர்பான தகவல்கள், ஆவணங்கள் அனைத்தும் சசிகலாவின் அறையில் இருந்து பெறப்பட்டது. அவருடைய அறைக்கு எப்படி, ஆவணங்கள் சென்றன என்றும், எப்படி டி.கே ராஜேந்திரனை பதவியில் நீட்டித்தீர்கள் என்றும் கேள்வி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மதுரை உயர் நீதிமன்றக் கிளை.
மேலும் படிக்க : குட்கா விவகாரம் தொடர்பான சி.பி.ஐ வழக்கு : நேரில் ஆஜரான விஜய பாஸ்கர்