Advertisment

குட்கா ஊழல் வழக்கு : நேரில் ஆஜரானார் விஜயபாஸ்கரின் உதவியாளர்

சிபிஐ சிறப்பு அதிகாரிகள் சென்னையில் முகாம்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணை, Gutkha Scam, Minister Vijaya Bhaskar

குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணை

குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணை : தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரணை செய்து வருகிறது. செங்குன்றம் பகுதியில் இருந்த குட்கா குடோனில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் சில முக்கியமான நபர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

Advertisment

குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணை

அதில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. சில காவல்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் அதில் இடம் பெற்றிருந்தன.

அதனைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு குட்கா வியாபாரி மாதவராவ் உட்பட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாதவராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்நிலையில் மத்திய புலனாய்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய உதவியாளர் சரவணன் ஆகியோரை நேரில் வந்து விளக்கம் அளிக்க அழைப்பாணை விடப்பட்டது.

குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணை நேரில் ஆஜரான அமைச்சரின் உதவியாளர்

விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனனிற்கு இதுவரை இரண்டு முறை அழைப்பாணை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அழைப்பாணையைத் தொடர்ந்து விஜயபாஸ்கரின் உதவியாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார்.  டெல்லியில் இருந்து மத்திய புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் சென்னையில் குழுமியுள்ளனர். குட்கா ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நபர்கள் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : விஜயபாஸ்கரின் உதவியாளர் நேரில் ஆஜராக சிபிஐ  உத்தரவு

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment