ஸ்டாலின் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் தடை வழக்கு - ஆகஸ்டில் விசாரணை
Gutkha scam : திமுக தரப்பில் தாங்களும் வழக்கு விசாரணைக்கு தயார் என்றும் டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர்கள் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.. இதையடுத்து வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்த வழக்கு நாள் முழுவதும் முழுமையாக விசாரிக்கப்படும்
சட்டமன்றத்தில் குட்கா ஊழல் பிரச்சினை எழுப்பியதாக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 21 பேருக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு தடைவிதிக்கப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை வரும் ஆகஸ்ட் 13ம் தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் குட்கா ஊழல் பிரச்சினை எழுப்பப்பட்டது.. அப்போது குட்கா பாக்கெட்டுகளை சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்ததாக கூறி திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 21 திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது..
இதை எதிர்த்து 21 சட்டமன்ற உறுப்பினர் சார்பில் சென்னை உயர் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உரிமை மீறல் நோட்டீசுக்கு தடைவிதித்தது.. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி அமர்வு முன்பு அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாரயண் ஆஜராகி உரிமை மீறல் நோட்டீஸ் தடை வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் எம்எல்ஏக்கள் பதவி காலம் விரைவில் முடிய உள்ளதாகவும் தெரிவித்தார்.. அப்போது திமுக தரப்பில் தாங்களும் வழக்கு விசாரணைக்கு தயார் என்றும் டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர்கள் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.. இதையடுத்து வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்த வழக்கு நாள் முழுவதும் முழுமையாக விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil