/tamil-ie/media/media_files/uploads/2023/08/Mari-Mohan-GV-Prakash.jpg)
இசையமைப்பார் ஜி வி பிரகாஷ், இயக்குனர் மாரி செல்வராஜ், மோகன் ஜி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர் சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டார்.
இதில் அந்த மாணவரின் தங்கை மீதும் வெட்டு விழுந்தது. இருவரும் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதை நேரில் பார்த்த மாணவன்-மாணவியின் தாத்தா நிகழ்விடத்திலே மரணம் அடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார்
தம்பி விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.
மோகன் ஜி
மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் பரவி வருகிறது.. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.. பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கை விரைவாக குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்.
மாரி செல்வராஜ்
கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான ரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகச்சொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.