இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் இன்று (பிப் 26) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார். மேலும், பொற்றாமரை குளத்தில் தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலக புகழ்பெற்றது. இங்கு தரிசனம் செய்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கோயில் மதுரையின் பெருமை" எனத் தெரிவித்தார்.
எனினும், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.