H. Raja Tamil News: பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருப்பவர் ஹெச்.ராஜா. இவர், கடந்த செப்டம்பர் 21ம் தேதி தனது பக்கத்தில், தன் வீட்டில் வளர்த்த அல்சேசன் நாய்க்கு வெறிபிடித்ததாகவும், அதனால் நாய் பிடிப்பவரிடம் சொல்லி அதை மூங்கிலால் அடித்தபோது நாய் இறந்துவிட்டது என்றும் பதிவிட்டு இருந்தார்.
Advertisment
இதனையடுத்து, ஸ்வப்னா சுந்தர் என்பவர் ஹெச்.ராஜாவின் மேற்கண்ட டுவிட்டர் பதிவை ஆதாரமாக கொண்டு அவர் மீது விலங்கு நல வாரியத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய விலங்கு நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், மிருக வதை தடை சட்டம் 1960 பிரிவு 11 படி, தெருநாய் உட்பட எந்த விலங்கையும் துன்புறுத்துவது குற்றமாகும், இந்திய தண்டனை சட்டம் 429 படி, எந்த விலங்கையும் கொலை செய்தல், விஷம் கொடுத்தல் ஆகிய குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisment
Advertisement
மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி ஏழு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.