பெரியார் சிலைக் குறித்து வன்மை பதிவு: ஹெச் ராஜா வருத்தம்!

தமிழகத்தில் ஈவெரா அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் அட்மின் என் அனுமதி இன்றி பதித்துள்ளார்

பெரியார் சிலைக் குறித்து தனது முகநூலில் பதிவிட்டிருந்த சர்ச்சைக்குரிய பதிவிற்கு  பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 48 மணி நேரத்துக்குள் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் நிறுவப்பட்ட லெனின் சிலையை அகற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தன் முகநூல் பக்கத்தில், ”லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்தின்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபூராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை.”, என பதிவிட்டிருந்தார்.

தமிழகத்தில் பெரியார் சிலை உடைத்தெறிக்கப்படும் என்ற எச்.ராஜாவின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும், சமூக வலைத்தளங்களிலும் ஹெச், ராஜாவிற்கு எதிராக நெட்டிசன்கள் பல்வேறு எதிர்ப்புக்களை தெரிவித்து வந்தனர். பின்பு, அவர் தனது கருத்தை முகநூலில் இருந்து நீக்கினார்.

இந்நிலையில், ஹெச் ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், பெரியார் சிலைக் குறித்த பதிவிற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் கூறியிருப்பது, “நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் அட்மின் என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பத…

Posted by H Raja on 6 मार्च 2018

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close