இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஹெச்.ராஜா கைது

ஏற்றத்தாழ்வுகளும் ஆணவ கொலைகளும் திருமாவளவன், சுப வீர பாண்டியன் போன்றவர்கள் பிறந்த பின்னரே நடந்து உள்ளது.

ஏற்றத்தாழ்வுகளும் ஆணவ கொலைகளும் திருமாவளவன், சுப வீர பாண்டியன் போன்றவர்கள் பிறந்த பின்னரே நடந்து உள்ளது.

author-image
WebDesk
New Update
H Raja arrest

H Raja arrest

சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக் கோரியும், திருச்சி திருவானைக்காவல் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் முன்பாக இன்று பாஜக சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.

Advertisment

பாஜக கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தலைமையில் பாஜகவினர் அங்கு திரண்டனர்.

ஏற்கனவே போராட்டம் அறிவித்திருந்த நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாஜகவினர், தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது ஹெச்.ராஜா உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

Advertisment
Advertisements

இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹெச்.ராஜா கூறியதாவது; சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு கொசு போன்று ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது, 80 சதவீத இந்திய மக்களை இனப்படுகொலை செய்வோம் என சொல்வதற்கு சமமானது ஆகும்.

H Raja Arrest

இதனால் ஒட்டுமொத்த இந்திய சனாதன நம்பிக்கையாளர்களும் கொந்தளித்து போயினர். பிரதமர் மோடியே மத்திய அமைச்சரவையை கூட்டி விவாதிக்கும் அளவுக்கு உச்சமாகியிருக்கின்றது இந்த விவகாரம். சனாதனத்தில் இருக்கும் 4 வர்ணங்களையும் திருவள்ளுவர் கூறி இருக்கிறார். திருவள்ளுவர் ஒரு சனாதனி.

ஆனால் வைரமுத்து தவறான தகவலை சொல்லி வருகிறார். இன்றைக்கு சனாதனம் என்பது இல்லை. சனாதனத்தை அளவீடு செய்வது யார்? புராண காலத்தில் இருந்து வர்ணங்கள் மாறி அப்போது திருமணங்கள் செய்திருக்கிறார்கள். ஏற்றத்தாழ்வுகளும் ஆணவ கொலைகளும் திருமாவளவன், சுப வீர பாண்டியன் போன்றவர்கள் பிறந்த பின்னரே நடந்து உள்ளது.

திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம், ஆனால் சனாதனம் என்பது மனிதர்கள் சார்ந்தது. ஆகவே இனப்படுகொலை செய்வதாக கூறிய உதயநிதி ஸ்டாலினை உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழித்துக்கொண்டு நிச்சயமாக பாஜக ஆட்சிக்கு வரும். விலை மாதர்களுடன் கூத்தடித்த இவர்களுக்கு சனாதனம் குறித்து பேசுவதற்கு எந்த வித தகுதி இல்லை எனத் தெரிவித்தார்.

இதனிடையே திமுகவையே டெங்கு, மலேரியா, காலரான என தமிழ்நாடு பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் இதனை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், கொசுவர்த்தி சுருள் எரியும் படம் ஒன்றை மட்டும் பதிவிட்டுள்ளார். அதில் எந்த கருத்தும் எழுதப்படவில்லை. இது மிகப் பெரிய புதிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: