பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செப்டம்பர் 29ம் தேதி காரைக்குடியில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது பேச்சால் யாருக்காவது மனது புண்பட்டு இருந்தால் வருத்தமான விஷயம்தான் என்று விளக்கம் அளித்தார்.
இயக்குனர் மோகன் ஜி இயக்கிய‘ருத்ரதாண்டவம்’ படத்தின் சிறப்புக் காட்சி பார்த்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த ஹெச்.ராஜா, “ஹிந்து இல்லாவிட்டால் தமிழ் எங்கிருந்து வந்தது? என்ன பேசுறீங்க எல்லாரும், இதுக்குதான் சொல்றேன், you all media people Presstitues (பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் ஒருபக்க சார்புடையவர்கள்). தமிழ் வேற இந்து வேறன்னு பேசக்கூடிய அளவுக்கு நீங்க வேணும்னே மதமாற்றத்திற்கு துணை போக வேண்டாம்னு நான் உங்களைக் கேட்டுக்கிறேன். Don’t become addict to conversion” என்று ஆவேசமாக கூறினார்.
மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சுப.வீரபாண்டியன் ஆகியோர் குறித்து கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்தார். ஹெச்.ராஜாவின் இந்த பேச்சு தமிழக அரசியலில் சர்ச்சையானது.
இதையடுத்து, பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து அநாகரிமாகப் பேசிவரும் பாஜக பிரமுகர் எச்.ராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செப்டம்பர் 29ம் தேதி காரைக்குடியில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது பேச்சால் யாருக்காவது மனது புண்பட்டு இருந்தால் வருத்தமான விஷயம்தான் என்று விளக்கம் அளித்தார்.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க, ரவுடிகளை அரசு கைது செய்து வருகிறது. இதற்கு திருமாவளவன், வன்னி அரசு போன்றோர் எதிர்ப்பு தெரிவிப்பது சரியா? போலீஸார் சாதி பார்த்து ரவுடிகளை கைது செய்யவில்லை.
செய்தியாளர்களுக்கு எதிராக தவறான வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. நான் பயன்படுத்திய வார்த்தையை மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும் பயன்படுத்தி உள்ளார். அர்த்தம் புரியாமல் யாருக்காவது மனது புண்பட்டிருந்தால் வருத்தமான விஷயம்தான். நான் பேசிய வார்த்தை தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிபீடியாவில் விளக்கம் இருக்கிறது.
உள்நோக்கத்தோடு ஒரு சிலர் ஆளுநர் பதவியை பற்றி அநாகரிகமாக பேசுவதை அனுமதிக்க முடியாது. முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மிகப்பெரிய சமூகப் பின்னணி கொண்டவர். நேர்மையானவர். அவரையும்இப்படித்தான் கொச்சைப்படுத்தினர். தமிழகத்தில் உடனடியாக அனைத்து நாட்களிலும் வழிபடகோயில்களை திறந்துவிட வேண்டும்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"