காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்புவின் டுவிட்டர் பதிவைக் குறிப்பிட்டு, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முதலில் தமிழை தமிழில் எழுத கற்றுக்கொள்ளவும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது. பொது முடக்கத்தால், அனைத்து தொழில் துறைகளும் மூடப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா, அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே இருந்துவந்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் பேசியபோது, மே 17-ம் தேதிக்குப் பிறகு, அறிவிக்கப்படும் பொது முடக்கம் மாறுபட்டதாக இருக்கும் என்று அறிவித்தார். மேலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். பிரதமரின் உரை நேற்று சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இருந்தது. பிரதமரின் நேற்றைய அறிவிப்பை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், ஆங்கில எழுத்துகளில் தமிழில், “போங்கடா... என் சமையலாவது முடிச்சிருப்பேன். நேரம் வீணாப் போச்சு” என்று பதிவிட்டிருந்தார்.
முதலில் தமிழை தமிழில் எழுத கற்றுக் கொள்ளவும். நான் 4 ஆண்டுகள் தான் ம.பி யில் இருந்தேன். இந்தியை இந்தியில் தான் எழுதுகிறேன். பிரதமர் சுயசார்பு பற்றி பேசியுள்ளது தங்கள் கட்சித் தலைவரை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்த உங்களுக்கு வீணாக தோன்றுவதில் ஆச்சரியமில்லை. https://t.co/lJpI4EbD5p
— H Raja (@HRajaBJP) May 12, 2020
குஷ்புவின் பதிவை சுட்டிக்காட்டிய, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, முதலில் தமிழை தமிழில் எழுத கற்றுக் கொள்ளவும் என்று கூறி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “முதலில் தமிழை தமிழில் எழுத கற்றுக் கொள்ளவும். நான் 4 ஆண்டுகள் தான் ம.பி யில் இருந்தேன். இந்தியை இந்தியில் தான் எழுதுகிறேன். பிரதமர் சுயசார்பு பற்றி பேசியுள்ளது தங்கள் கட்சித் தலைவரை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்த உங்களுக்கு வீணாக தோன்றுவதில் ஆச்சரியமில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.