குஷ்புவுக்கு தமிழ் எழுதத் தெரியாதா? ஹெச்.ராஜா திடீர் காட்டம்

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்புவின் டுவிட்டர் பதிவைக் குறிப்பிட்டு, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முதலில் தமிழை தமிழில் எழுத கற்றுக்கொள்ளவும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

h raja criticize kushbu, h raja, kushboo, kushbu, h raja says to kushbu to write in tamil, bjp, congress, தமிழில் எழுத தெரியாதா? ஹெச்.ராஜா, குஷ்பு, குஷ்புவை விமர்சித்த ஹெ.ராஜா, lockdown, kushboo tweet in thanglish, latest tamil news, latest tamil nadu news
h raja criticize kushbu, h raja, kushboo, kushbu, h raja says to kushbu to write in tamil, bjp, congress, தமிழில் எழுத தெரியாதா? ஹெச்.ராஜா, குஷ்பு, குஷ்புவை விமர்சித்த ஹெ.ராஜா, lockdown, kushboo tweet in thanglish, latest tamil news, latest tamil nadu news

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்புவின் டுவிட்டர் பதிவைக் குறிப்பிட்டு, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முதலில் தமிழை தமிழில் எழுத கற்றுக்கொள்ளவும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது. பொது முடக்கத்தால், அனைத்து தொழில் துறைகளும் மூடப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா, அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே இருந்துவந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் பேசியபோது, மே 17-ம் தேதிக்குப் பிறகு, அறிவிக்கப்படும் பொது முடக்கம் மாறுபட்டதாக இருக்கும் என்று அறிவித்தார். மேலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். பிரதமரின் உரை நேற்று சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இருந்தது. பிரதமரின் நேற்றைய அறிவிப்பை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், ஆங்கில எழுத்துகளில் தமிழில், “போங்கடா… என் சமையலாவது முடிச்சிருப்பேன். நேரம் வீணாப் போச்சு” என்று பதிவிட்டிருந்தார்.


குஷ்புவின் பதிவை சுட்டிக்காட்டிய, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, முதலில் தமிழை தமிழில் எழுத கற்றுக் கொள்ளவும் என்று கூறி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “முதலில் தமிழை தமிழில் எழுத கற்றுக் கொள்ளவும். நான் 4 ஆண்டுகள் தான் ம.பி யில் இருந்தேன். இந்தியை இந்தியில் தான் எழுதுகிறேன். பிரதமர் சுயசார்பு பற்றி பேசியுள்ளது தங்கள் கட்சித் தலைவரை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்த உங்களுக்கு வீணாக தோன்றுவதில் ஆச்சரியமில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: H raja criticize kushbu to write in tamil

Next Story
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தை தாக்கும் வெப்ப அலைlow pressure area bay of bengal, low pressure area become cyclone, வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வங்க கடலில் புயல், சென்னை, தமிழகத்தை தாக்கும் வெப்ப அலை, bay of bengal, cyclone trigger heatwave, சென்னை வானிலை ஆய்வு மையம், chennai regional metrology alert, tamil nadu metrology alert, south west monsoon
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com