Tiruchi ST Joseph College Seminar Cancelled, H Raja, Mafoi Pandiarajan, ஹெச்.ராஜா, அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன், திருச்சிராப்பள்ளி புனித ஜோசப் கல்லூரி
பெரியார் சிலை சர்ச்சையைத் தொடர்ந்து அந்தப் பதிவை போட்ட தனது முகநூல் ‘அட்மின்’னை நீக்கிவிட்டதாக ஹெச்.ராஜா 3 மொழிகளில் பேட்டி கொடுத்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ‘டெல்லிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோதுதான் சர்ச்சைக்குரிய அந்தப் பதிவை பார்த்தேன். சிலைகளை உடைப்பதில் எனக்கோ, பாஜக.வுக்கோ உடன்பாடு இல்லை. சித்தாந்த ரீதியாக மக்களை சந்தித்து வெற்றி பெறுவோம்.
எனவே அந்தப் பதிவை மட்டுமல்ல, எனது அனுமதி இல்லாமல் அந்தப் பதிவை போட்ட ‘அட்மின்’னையும் நீக்கிவிட்டேன். ஆனாலும் எனது முகநூல் பக்கத்தில் அது இடம் பெற்றதால அது யார் மனதை புண்படுத்தியிருந்தாலும் இதயபூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறினார்.
முதலில் ஆங்கிலத்திலும், பிறகு தமிழிலும், பிறகு இந்தியிலும் இதை கூறினார் ஹெச்.ராஜா. நிருபர்களின் இதர கேள்விகளுக்கு பதில் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தார்.