ஹெச். ராஜா சென்னை அப்பல்லோவில் அனுமதி: சிகிச்சை பற்றி அவரே வெளியிட்ட பதிவு

பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் ஹெச். ராஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை...

பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் ஹெச். ராஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை...

author-image
WebDesk
New Update
H Raja clarifies about his controversy speech, H Raja controversy speech on press people, H Raja, செய்தியாளர்களுக்கு எதிராக தவறான வார்த்தையை பயன்படுத்தவில்லை, ஹெச் ராஜா விளக்கம், பாஜக, BJP, Seeman, Suba Veerapandian, PRESS, Tamil news, tamil nadu news

ஹெச். ராஜா தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவருகிறார்.

H Raja has been admitted to hospital: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் ஹெச் ராஜா, நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களின் குரலாக ஒலிக்கக் கூடியவர் ஹெச். ராஜா. இவரின் ட்விட்டர் கணக்கில் நேற்றிரவு (அக்.11) 10 மணிக்கு மேல் தகவல் ஒன்று பரிமாறப்பட்டிருந்தது.

அதில், ஹெச் ராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதனால் அவர் வழக்கமான பணிகளில் இருந்து சற்று ஓய்வில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment
Advertisements

இந்த நிலையில் அவருக்கு நெஞ்சு வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து அவரை பரிசோதித்ததில் அவருக்கு ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் மருத்துவர்கள் அவருக்கு இருதய அருவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் மருத்துவ ஓய்வில் உள்ளார். அவரை அவரது குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

H Raja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: