பாரதிய ஜனதா முன்னாள் தேசிய செயலாளரும், அக்கட்சியின் மூத்தத் தலைவருமான ஹெச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “ஊழல் வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவ குற்றவாளி என தீர்ப்பு முன்கூட்டியே வந்துவிட்டது. தற்போது தண்டனை விவரங்கள்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.
மு.க. ஸ்டாலின் அரசில் ஊழல் மலிந்து காணப்படுகிறது. திமுக ஊழல் பணத்தில் பட்ஜெட் போடலாம். திமுகவுக்கு சனிப்பெயர்ச்சி ஆரம்பித்துவிட்டது.
சிலர் பொன்முடி ஊழல் செய்திருப்பார்; ஆனால் அவர் மனைவி கையெழுத்து மட்டும்தானே போட்டிருப்பார் என்கிறார்கள். இந்த விஷயத்தில் ஊழல் அமைச்சர்கள் வீட்டில் உள்ள பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பொன்முடி ஓர் மோசமாக நபர். அவர் ஊழல்வாதி என்பது நிரூபிக்கப்பட்டது. இது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து டி.ஆர். பாலு. இந்த ஊழல் அரசாங்கம் அழிய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்கும் அதற்கு உதயநிதி காரணமாக இருப்பார் என ஹெச் ராஜா கூறினார்.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“