BJP National Secretary H. Raja Meets Tamil Nadu Governor Banwarilal Purohit in Rajbhavan, Chennai: பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று மதியம் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை சென்னையில் இருக்கும் ராஜ்பவனில் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வல நிகழ்வில் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் உயர்நீதிமன்றத்தை தகாத வார்த்தைகள் கூறி திட்டினார். மேலும் தமிழக காவல்துறைப் பற்றியும் மோசமாக அச்சமயம் விமர்சித்தார் ஹெச். ராஜா. உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி ஊர்வலம் நடத்தினார். இது குறித்து முழுமையான செய்தியைப் படிக்க
தமிழக ஆளுநர் பன்வரிலாலை நேரில் சந்தித்து பேசிய ஹெச். ராஜா
இதனால் இவர் மீது வழக்குகள் பதியப்பட்டு இவரை கைது செய்வதற்காக காவல்துறை தேடிவருகிறது. இந்நிலையில் இவர் ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்துள்ளார்.
சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த பேச்சு வார்த்தையில் இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.