தமிழ் பேச்சாளர் நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வலியுறித்து புதன்கிழமை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே பாஜக சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்பட 308 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக பேச்சாளர் நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வலியுறித்து புதன்கிழமை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மேலும், 2019ல் நடந்த குற்றத்திற்கு 2019 திலேயே நடவடிக்கை தேவை. இல்லையெனில் 2020 போராட்ட ஆண்டாகத் துவங்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்
நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி 1.1.2020 மாலை 3.00 மணிக்கு மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே திரு.LG, பொன்னார், CPR மற்றும் நான் Sit in Dharna மேற்கொள்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
— H Raja (@HRajaBJP) December 31, 2019
2019ல் நடந்த குற்றத்திற்கு 2019 திலேயே நடவடிக்கை தேவை. இல்லையெனில் 2020 போராட்ட ஆண்டாகத் துவங்கும்.
— H Raja (@HRajaBJP) December 31, 2019
நெல்லை கண்ணன் பேச்சுக்கு சீமான் ஆதரவு தெரிவித்திருக்கிறார் என்பதை சுட்டி காட்டிய எச்.ராஜா, நாம் தமிழர் சீமானும் கைது செய்யப் படவேண்டும் என்றும் ட்விட்டரில் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது; சுற்றறிக்கை அனுப்பக் கோரி வழக்கு
நெல்லை கண்ணன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி. கண்ணன் பேசியுள்ளது அவதூறு பேச்சல்ல. கொலைக்கு தூண்டுதல் (சோலிய முடி). ராஜிவ்காந்தி படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் தமிழகத்தில் நடத்த திட்டமிடுவதாகவே தெரிகிறது என்றும் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
சீமானும் கைது செய்யப்பட வேண்டும் https://t.co/GN6MPThtOl
— H Raja (@HRajaBJP) December 31, 2019
முன்னதாக, திருநெல்வேலி மேலப்பாளையத்தில் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு தொடர்பாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய தமிழ் பேச்சாளர் நெல்லை கண்ணன்பேச்சாளர் , பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, நெல்லை கண்ணன் மீது குற்றம் செய்ய தூண்டுதல், இரு பிரிவினரிடையே மோதல் உண்டாக்கும் வகையில் பேசுதல் என இந்திய தண்டனை சட்டம் 504,505,505(2) என மூன்று பிரிவின் கீழ் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
மேலும், எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கல்யாணராமனை முகநூல் பதிவிற்கு கைது செய்து ரிமாண் செய்த காவல்துறை, தற்போது நெல்லை கண்ணன் விசயத்தில் வெறும் வழக்குப் பதிவு மட்டும் செய்து நாடகமா? என்று கேள்வியையும் முன்வைத்தார்.
இந்த நிலையில் ஹெச்.ராஜா அறிவித்தபடி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு, நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தர்ணாவில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து மயிலாப்பூரில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்தனர். பின்னர்,அவர்களை மாலையில் விடுத்தினர். இந்த தர்ணா போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பாஜகவினர் 308 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.