‘ஓடிப்போனவள்’ பற்றி எழுதிய வைரமுத்து தமிழை வளர்த்தவரா? பாரதிராஜாவுக்கு ஹெச்.ராஜாவின் பதில் கேள்வி!

ஒவைசி அவர்கள் 15 நிமிடம் ராணுவத்தை நீக்குங்கள் .80% இந்துக்களை கொன்று குவிப்பேன் என்று சொன்ன போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

ஆண்டாளைப் பற்றித் தவறாக எழுதியதாக, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கடுமையான வார்த்தைகளால் வைரமுத்துவை விமர்சித்திருந்தார். இந்நிலையில், வைரமுத்துவுக்கு ஆதரவாக நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்த இயக்குனர் பாரதிராஜா, “வைரமுத்து என்பவர் தனிமனிதனல்ல, தமிழினத்தின் பெரு அடையாளம் என்பதை விமர்சிப்பவர்களே உணர்ந்துகொள்ள வேண்டும். வைரமுத்து போல உன்னால் தமிழினத்திற்கு இலக்கியம் படைக்க முடியுமா? சோர்ந்து கிடக்கும் மனிதர்களைத் தட்டி எழுப்ப, ஒரே ஒரு பாடல் எழுத முடியுமா? அடையாளப்படுத்தப்பட்ட தமிழனை அழிக்க நினைக்காதே” என்று ஹெச்.ராஜாவை காட்டமாக விமர்சித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து, பாரதிராஜாவுக்கு பதில் அளித்துள்ள ஹெச்.ராஜா, ” பாரதிராஜா அவர்கள் எச்.ராஜாவால் இந்தியா துண்டாடப் படுமோ என்று அச்சம் தெரிவித்து உள்ளார்.

ஒவைசி அவர்கள் 15 நிமிடம் ராணுவத்தை நீக்குங்கள் .80% இந்துக்களை கொன்று குவிப்பேன் என்று சொன்ன போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

அஜ்மல் கசாப்,அப்சல் குரு போன்றவர்கள் இந்தியாவில் தீவிரவாத சம்பவங்களை அரங்கேற்றிய போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

காஷ்மீரில் பல இந்துக்கோவில் இடிக்கப்பட்ட போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட்கள் விரட்ட பட்ட போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

வங்கதேச அகதிகள் அஸ்ஸாம் மாநிலத்தில் பூர்விக போடோ குடிமக்களை விரட்டிய போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

காங்கிரஸ் கட்சி மதக்கலவர தடுப்பு மசோதா கொண்டு வர முயற்சித்த போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

கேரளாவில் லவ் ஜிஹாத் நடக்கும் போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

எல்லையில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மிருகங்களால் கொல்லப்பட்டும் போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

அப்போது எல்லாம் ஜடம் போல் இருந்த பாரதி ராஜா அவர்கள் இப்போது வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதேன்.

தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றை தந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும், கம்பனும், இந்து ஆன்மீக பெரியோரும் தான் தமிழ் வளர்த்தனர். வேலைக்காரி, ஓடிப்போனவள், போலீஸ்காரன் மகள் ஆகியவற்றை எழுதியவர்கள் அல்ல” என்று ஹெச்.ராஜா பதில் அளித்துள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: H raja reply to director bharathiraja statement

Next Story
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்: நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com