Advertisment

ஜல்லிக்கட்டு தீர்ப்பில் தி.மு.க, ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது - ஹெச். ராஜா

ஜல்லிகட்டின் போது மாநில அரசை வழிநடத்தியது மத்திய அரசுதான். 100 சதவீத கிரிடிட் மத்திய அரசுக்குதான். தி.மு.க ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது என ஹெச். ராஜா கூறினார்.

author-image
WebDesk
New Update
H Raja, BJP, DMK Stalin can not claim in Jallikkattu verdict, ஜல்லிக்கட்டு தீர்ப்பில் தி.மு.க ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது, ஹெச். ராஜா, H Raja press meet, DMK, Stalin, Jallikkattu verdict

ஹெச். ராஜா

கோவை ஈச்சனாரி பகுதியில் பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது பேசிய அவர், மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி நிறைவடைந்து 10 வது ஆண்டு துவங்குகின்றது. கோவிட் காலத்தில் நெருக்கடி இருந்தாலும் பொருளாதாத்தில் 5 வது இடத்தில் இந்தியா இருக்கின்றது. பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் முதல் இடத்தில் இந்தியா இருக்கின்றது. இதற்கு காரணமான மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றபட்டு இருக்கின்றது.

மே 30 முதல் இந்த சாதனைகளை கடைசி வாக்காளரிடம் வரை கொண்டு சேர்ப்போம்.
ஜல்லிகட்டுக்கு யார் யாரோ கிரிட்டிட் எடுத்து கொள்கின்றனர். ஆனால் உண்மையில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி ஆட்சியின் போது ஜல்லிகட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.

2017 ஜனவரியில் அரசை நாம் வழிநடத்தி , மாநிலத்தை அவசர தீர்மானம் நிறைவேற்ற சொல்லி, அப்போது முக்கிய அமைச்சராக இருந்த
ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து ஓரே நாளில் 4 அமைச்சங்களை பார்த்து அனுமதி கொடுக்கப்பட்டது.

2016 அரசாணைக்கு வாங்கிய தடை இப்போது நீங்கி இருக்கின்றது. ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற காரணமான நரேந்திர மோடிக்கு நன்றி பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றது. கேரளாவில் இருந்து கழிவுகள் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றது. கேரளாவிற்கு ஏராளமான கனிம வளங்கள் கடத்தப்படுகின்றது.

தமிழகம் முழுக்க மதுக்கடைகள் திறக்கபட்டு இருக்கின்றது. கள்ள சாராயத்தால் 22 பேர் இறந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணமாக மது இருக்கின்றது. மது விலக்கு கொண்டு வர பட வேண்டும்.

கள்ள சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதை கண்டித்து நாளை மகளிரணி போராட்டம் நடத்தப்படும். மகளிரணி சார்பில் ஆளுநரை பார்த்து மனு அளிக்கவும் இருக்கின்றனர்.

நாளைய ஆர்ப்பாட்டம் மகளிரணி சார்பில் நடந்தாலுல் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மக்களை சந்தித்து இருக்கின்றோம். அது போலதான் இந்த ஆண்டும் நடத்தப்படுகின்றது.

பக்கத்து வீட்டில் குழந்தை பிறந்தால் நான்தான் காரணம் என சிலர் சொல்லிக் கொள்கின்றனர். அது போல ஜல்லிகட்டிற்கு நாங்கள்தான் காரணம் என சொல்லி கொள்கின்றனர்.

மதுவிலக்கு மாநில அளவில் முடிவு செய்யபட வேண்டியது. கள்ளசாரய மரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கள்ளசாரயம் கூடாது என்பதற்க்காக மதுக்கடைகள் கொண்டு வரப்பட்டது. அப்புறம் ஏன் கள்ள சாராயம் வருகின்றது?. சாராயத்திற்கு வழிவகை செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

ஜல்லிகட்டின் போது மாநில அரசை வழிநடத்தியது மத்திய அரசுதான். 100 சதவீத கிரிடிட் மத்திய அரசுக்குதான். அப்போது முதல்வராக இருந்தவர் ஒ.பி.எஸ், இதற்கு அ.தி.மு.க எடப்பாடி பழனிச்சாமி உரிமை கொண்டாடினாலும் தவறில்லை. தி.மு.க ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது என இவ்வாறு தெரிவித்தார்.

செய்தி: பி. ரஹ்மான்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

H Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment