Advertisment

செந்தில் பாலாஜி வீட்டில் 150 கிலோ தங்கம் பிடிபட்டதா? ஹெச். ராஜா சந்தேகம்

வருமானவரித் துறை சரியான தகவலை வெளியிடும் வரை செந்தில்பாலாஜி வீட்டில் 150 கிலோ தங்கம் மட்டும்தான் இருந்தது என்பதை சொல்ல முடியாது என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹெச். ராஜா சந்தேகம்

ஹெச். ராஜா சந்தேகம்

வருமானவரித் துறை சரியான தகவலை வெளியிடும் வரை செந்தில்பாலாஜி வீட்டில் 150 கிலோ தங்கம் மட்டும்தான் இருந்தது என்பதை  சொல்ல முடியாது என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisment

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாவது : ‘ நம் உள்ளூர் அமைச்சர் கே.என்.நேரு எனது நெருங்கிய நண்பர். அவரிடம் கேட்கும்போது, சாக்கடை அடைத்திருந்தால் சொல்லவும், தண்ணீர் வரவில்லை என்றால் சொல்லவும், நான் எதாவது செய்திருந்தால் அதை பற்றி மட்டுமே கேள்விகேளுங்கள். ஆனால் மற்ற கேள்விகள் கேட்காதீர்கள் என்று கூறுகிறார். எந்த மூத்த தலைவரும் செந்தில் பாஜிக்கு ஆதரவாக பேச தயாராக இல்லை. துரைமுருகனைப் போல் எதாவது மூத்த திமுக தலைவர் வாய் திறந்துள்ளார்களா? டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ. 10 வாங்கிறார்கள் என்று எல்லாமே முன்பாக வெளியே வந்துவிட்டது. நிரூபர்கள் இந்த கேள்வியை கேட்டபோது, நீங்கள் ஒவ்வொரு கடைக்கும் சென்றீர்களா? 5,300 கடைக்கு சென்று பார்த்தீர்களா ? என்று அவர் கேட்கிறார். என்ன ஊழல் நடந்திருக்கிறது என்பதை டாக்டர் கிருஷ்ணசாமி  பட்டியல் போட்டியிருக்கிறார். 8 மாதத்திற்கு மேலாக சி.பி.எஸ்.சி என்ன நடக்கிறது என்பதை கவனித்து வந்ததாகவும் தகவல் உள்ளது. நேற்று கூட அவரிடத்தில்  150 கிலோ தங்கம் இருந்ததாக கூறுகிறார்கள். வருமானவரித் துறை தகவலை வெளியிடாத வரை ரூ. 150 கிலோதான் இருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் ஒரு கணக்காளராக இருந்ததால் எனக்கு தெரியும்.

 உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லாமல் இது போன்ற ரைட்டுகள் நடக்காது. சி.பி.ஐ அல்லது வருமான வரித்துறை ஆகியவை மத்திய அரசு சொல்லி செயல்படவில்லை. உறுதியான தகவலின் அடிப்படையில் ரைடு நடக்கிறது. முதலில் 9 இடங்களில் மட்டுமே ரெய்டு நடைபெற்றது. தொடர்ந்து 200 இடங்கள்வரை அது சென்றுள்ளது. ஒரு இடத்தில் ரெய்டு நடக்கும்போது, அங்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் மட்டுமே அடுத்த இடத்திற்கு சென்று ரெய்டு நடக்கும். யாரையும் மிரட்ட இது நடக்கவில்லை. தனக்கு பயம் இல்லை என்று செந்தில் பாலாஜியே செல்கிறார்” என்று அவர் கூறினார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment