வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக தனது கருத்துகளை பா.ஜ.க மூத்த நிர்வாகி ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது, வக்ஃபு வாரியத்திற்கு எதிராக த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "விஜய் அலுவலகம் இருக்கும் பனையூர் பகுதியை வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என்று கூறி இருந்தால், விஜய்க்கு புத்தி உறைத்திருக்கும். வேப்பூர், பவானி, கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு சென்று விஜய் பார்க்க வேண்டும்.
ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியலை விஜய் செய்கிறார். வீட்டில் இருந்தபடியே ஏதாவது பேசிக் கொண்டு அரசியல் செய்கிறார். விஜய்யின் இந்த அறிக்கை 100 சதவீதம் இந்து விரோத செயல்பாடு. இதனை சொல்வதற்கு எனக்கென்ன கட்டுப்பாடு? இதை சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
நடிகர் விஜய்யின் வக்ஃபு எதிரான செயல்பாடுகள் அனைத்தும் இந்து விரோதம். இதற்கு எதிராக பேசும் அனைவரும் இந்துக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். இதை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்று கூறினார்.
செய்தி - க. சண்முகவடிவேல்