'டெல்லி நிலவரம் தமிழகத்திலும் நிகழலாம்' - சலசலப்பை உருவாக்கும் ஹெச்.ராஜா ட்வீட்
கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக்களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார்
கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக்களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார்
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு சி.ஏ.ஏ. எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுக்கும், சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
Advertisment
வன்முறையில் ஒரு காவலரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் வன்ணாரப்பேட்டையிலும் இதுபோல கலவரம் வரும் என்று ஹெச். ராஜா தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
Advertisements
இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில், "கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக்களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக் களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட வேண்டும்
டெல்லி கலவரம் போல் வண்ணாரப்பேட்டையிலும் நடக்கலாம் என்பதை எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் ஹெச்.ராஜா கூறியுள்ளார் என்ற கேள்வி எழுகிறது. அப்படி அது குறித்த தகவல் முன்கூட்டியே அவருக்கு தெரியும் பட்சத்தில், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல், ட்வீட் செய்து செய்வது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil "