கனிமொழி பற்றிய ஹெச்.ராஜாவின் ட்வீட்டுக்கு அதே ஆபாச மொழியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கனிமொழி பிறப்பு குறித்து சர்ச்சை பதிவை வெளியிட்ட ஹெச்.ராஜா மீது இணைய உலகமே பாய்ந்து பிராண்டிக் கொண்டிருந்தது. ஹெச்.ராஜாவுக்கு எதிரான விவாத களமாக இது அமைந்தது மட்டுமல்லாமல், ஹெச்.ராஜா மீது பாஜக தேசிய தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடியும் இதில் உருவானது!
திமுக சார்பில் முதலில் கருத்து தெரிவித்த செய்தி தொடர்பாளர்கள் சரவணன், மனுராஜ் ஆகியோர் காட்டமாக, அதேசமயம் ஆபாசம் இல்லாமல் பதிவுகளை வெளியிட்டனர். ஆனால் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , பதிலுக்கு பதில் என்ற அளவில் ஹெச்.ராஜாவின் பிறப்பு குறித்து மிக ஆபாசமான ஒரு பதிவை வெளியிட்டு சம நிலைப்படுத்தியிருக்கிறார்.
ஆர்.எஸ்.பாரதியின் அறிக்கை மறைமுகமாக பிரதமர் மோடியையும் தாக்குவதாக அமைந்திருக்கிறது.
ஆக, இப்போது விவாதம், அரசியலின் தரம் தாழ்ந்து போனதாக மாறியிருக்கிறது. எனவே ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடி பாஜக தலைமைக்கு இனி இல்லை. இதில் அதிக நிம்மதி, ஹெச்.ராஜாவுக்குத்தான்! ஏன் இப்படிச் செய்தார் ஆர்.எஸ்.பாரதி?