டில்லியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மோடியை சந்தித்த படத்தை, பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வெளியிட்டு, இதுதான் இதுதான் பெரியாரிஸ்டுகளுக்கும் இந்துத்துவ வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டில்லி சென்று நாடாளுமன்றத்தில், அண்ணா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். பா.ஜ. முன்னாள் தலைவர்களான அத்வானி, சுப்பிரமணியசுவாமி உள்ளிட்டோர்களையும் சந்தித்துப்பேசினார்.
இதனிடையே, பா.ஜ., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, டுவிட்டரில், பிரதமர் மோடி - வைகோ சந்தித்த படத்தை பதிவிட்டு உள்ளார். தமிழகத்திற்கு பிரதமர் வந்த போது "Go back Modi" என்று கருப்பு பலூன் விட்டனர். அதே நபர்கள் பிரதமரை சந்திக்கும் போது இன்முகத்துடன் வரவேற்றுள்ளார் பிரதமர். இதுதான் பெரியாரிஸ்டுகளுக்கும் இந்துத்துவ வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு தொடர்பாக நெட்டிசன்கள், ஹெச். ராஜாவிற்கு ஆதரவாகவும், சிலர் வைகோவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைகோ,பார்த்துட்டு வருவதெல்லாம் மோடிஜி, அத்வானிஜி போன்ற நமது தலைவர்களை மட்டுமே!...இதன்காரணமாக, கூட்டணி காங்கிரஸ் தலைவருங்க புகைச்சலில் இருக்கிறார்கள் என்று பா.ஜ. ஆதரவாளர் கருத்து தெரிவித்துள்ளார். இதுபோன்றவர்களை பக்கத்தில் நிறுத்துவது பிரதமரின் உயிருக்கே ஆபத்தாக கூட முடியும். மாற்று கட்சியினரின் குரல்களுக்கு செவிமடுக்கலாமே ஒழிய அவர்களை கட்டியணைப்பது பாஜக தொண்டர்களுக்கு செய்யும் துரோகம். இந்த நிகழ்வு தமிழக பாஜகவினர்களுக்கு தலைகுனிவையே கொடுத்துள்ளது என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
நீங்கள் கூட கலைஞரை கனிமொழியை திமுகவை இழிவு செய்துவிட்டு, உங்கள் மணிவிழாவுக்கு @mkstalin ஐ அழைத்தீர்கள். அவரும் இன்முகத்துடனேயே வரவேற்றார்.
இது 5 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தபோது எடுத்த போட்டோ, பழைய போட்டோவை போட்டு ஹெச்.ராஜா பதிவிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.