எச். ராஜாவின் சிறுநீர் பாசனம் பேச்சு... கூட்டத்தில் ஏற்பட்ட குபீர் சிரிப்பு

சொட்டு நீர் பாசனம் என்று சொல்லுவதற்கு பதில் சிறுநீர் பாசனம்

சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமித்ஷா கூறிய சொட்டுநீர் பாசனத்தை எச். ராஜா சிறுநீர் பாசனம் என்று மொழிபெயர்த்தது வைரலாகிறது.

பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர் அமித்ஷா, நேற்று தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். இவரின் வருகைக்கான முக்கிய காரணம் சென்னையில் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தான். பின்னர் சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பாஜக உயர்மட்டக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் மாலை நடைபெற்றது. இதில் அமித்ஷா பங்கேற்றுப் பேசினார். அமித்ஷா ஹிந்தியில் பேசியதால் அவரின் பேச்சை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் பொறுப்பில் இருந்தார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

அப்போது அமித்ஷா அவர்கள் மைக்ரோ இரிகேஷன் (சொட்டுநீர் பசனம்) திட்டத்திற்காக 332 கோடி கொடுக்கப்பட்டது என்று ஹிந்தியில் தெரிவித்தார். இதனை மொழிபெயர்த்த அமித்ஷா ‘சிறுநீர் பாசன திட்டங்களுக்காக 332 கோடி கொடுக்கப்பட்டுள்ளது’ என்ற எச்.ராஜாவின் மொழிபெயர்த்தார். சொட்டுநீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என்று எச் ராஜா கூறியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சொட்டு நீர் பாசனம் என்று சொல்லுவதற்கு பதில் சிறுநீர் பாசனம் என்று மொழி பெயர்ப்பில் கூறியதால் நெட்டிசன்கள் பலரும் எச். ராஜாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

×Close
×Close