வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் நமஸ்கார்
ஹாய் பிரெண்ட்ஸ், என்ன நலமா இருக்கீங்களா? பொங்கல் ஹாலிடேஸ் எல்லாம் முடிஞ்சு மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பிட்டீங்களா?..
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
வந்ததை வரவில் வைப்போம், வாரததை செலவில் வைப்போம்னு உயரிய கருத்தோட வாங்க, நமது இன்றைய நிகழ்ச்சிக்கு போவோம்…
கேரளாவில், உள்ள மசூதி ஒன்றில் இந்து முறைப்படி கல்யாணம் நடந்துள்ளது. மத ஒற்றுமைக்கு உதாரணமாக நடந்த வைபவத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவிச்சிருக்காரு.
கடவுளின் தேசத்துல எல்லாமே நல்லதாத்தான் நடக்கும்…
Hai Guys – காணும் பொங்கல கண்டும் காணாம விட்றாதீங்க பாஸ் ; அப்புறம் காணாம போயிரும்..
Hai guys : உஷ்ஷ்…சத்தம் கூடவே கூடாது – இது மாஸ்டரின் மாஸ் ஆர்டர்
நேத்து மாநிலம் முழுக்க 5 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு இலவச போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால், கடந்த 16 ஆண்டுகளாக தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக உள்ளதாக முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வாழ்த்துக்கள்…
தாய்மொழியில பேசுறத பெருமையா கருத வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில சொன்னாரு..
நல்ல விஷயம் தான்….ஆனா….
தேனி மாவட்டம் போடிமெட்டில் பகலிலேயே வெண்மேகக் கூட்டம் கடலலைகள் போல் திரண்டு ‘குளுகுளு’ சீசனை ரம்மியமாக நீடிக்க செய்வதால் சுற்றுலா பயணிகள் இதமான குளுமையை அனுபவித்து வருகின்றனர்.
என்சாய் பண்றாங்க…
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் இன்னொரு நிகழ்ச்சியில சந்திப்போம் bye