Hai guys : ரயில், கேஸ் சிலிண்டர் விலையுயர்வு என கோலாகலமாத்தான் ஆரம்பிச்சிருக்கு புத்தாண்டு

Hai guys : ஜெயலட்சுமி என்பவரின் மூலம் சிவகாசிக்கு கிடைத்த கரும்புள்ளியை, மகாலட்சுமியின் மூலம் துடைத்து அழித்துள்ளது சிவகாசி .

By: Updated: January 3, 2020, 11:51:44 AM

புத்தாண்டு பொறந்தாச்சு. இந்தாண்டின் முதல் Hai guys நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

வாங்க, இன்றைய நிகழ்ச்சிக்கு போகலாம்..

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ?

ஜெயலட்சுமி என்பவரின் மூலம் சிவகாசிக்கு கிடைத்த கரும்புள்ளியை, மகாலட்சுமியின் மூலம் துடைத்து அழித்துள்ளது சிவகாசி .

சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ… மகிழ்ச்சியில் சென்னை !

தமிழக அரசு துறையில், துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்பட எட்டு வகை பதவிகளில், 181 காலியிடங்களை நிரப்ப நடைபெற்ற குரூப் 1 தேர்வில் சிவகங்கையை சேர்ந்த மாணவி அர்ச்சனா மாநில அளவில் முதலிடம் பிடித்தார். சிவகாசியை சேர்ந்த பட்டாசு தொழிலாளி மகாலட்சுமி, 4ம் பிடித்து சாதனை படைத்தார். வாழ்த்துக்கள் சகோதரிகளே…

Hai guys : புத்தாண்டு கொண்டாட்ட களத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவை

Hai guys : 2019 மட்டுமல்லாம, நாளைக்கு இதுவும் முடியுதாம்…. So sad..

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இப்போ நடந்துகிட்டு இருக்கு, இதுல ஜெயிக்கிறவங்க, ஜனவரி 6ம் தேதி பதவியேத்துப்பாங்களாம்.

தலைநகர் டில்லியை அச்சுறுத்தி வந்த காற்று மாசு சற்று அடங்கியிருந்த நிலையில், மீண்டும் காற்று மாசு அபாயம் ஏற்பட்டிருக்காம், பாவம்தான் அந்த ஊரு மக்கள்….

கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களுக்காக பிரதமர் மோடி ஆற்ற இருந்த உரை, ஜனவரி 16ம் தேதிக்கு பதிலாக 20ம் தேதிக்கு மாற்றப்ப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவிச்சிருக்கு. 16ம் தேதி லீவா இல்லையா என்ற விவகாரத்துக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கு…

2020 புத்தாண்டு பரிசாக, நமது பட்ஜெட்டில் மேலும் துண்டு விழுந்துருக்கு, 1ம் தேதி நள்ளிரவு முதல் ரயில் பயண கட்டணம் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், மானியம் இல்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் ரூ.14 என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
(நல்லாத்தான் பொறந்துருக்கு புத்தாண்டு)

பண்டிகை மட்டுமல்ல, மண்பாண்டம் செய்பவர்களின் வாழ்க்கையும் சிறக்க பொங்கல் பண்டிகையில் அனைவரும் மண்பானையில் பொங்கல் வைக்குமாறு பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. நல்ல முயற்சி…

‘போலீசாரின் அதிரடி நடவடிக்கை மற்றும் ‘சிசிடிவி கேமரா’ பொருத்தியதன் வாயிலாக, சென்னையில், 50 சதவீத குற்றங்கள் குறைந்துள்ளன,” என, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார். ஹேட்ஸ் ஆப் ஆபிசர்ஸ்….

ஓகே, மற்றொரு நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம். Bye…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Hai guys local body election group 1 exam results new year

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X