வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் நமஸ்கார்
ஹாய் பிரெண்ட்ஸ், பொங்கல் கொண்டாட்டம் துவங்கியாச்சச?... சொந்த ஊர்களுக்கு சுகமா போயி சேந்துட்டீங்களா... பொங்கல என்ஜாய் பண்ணுங்க..
கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,...
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
வாங்க, நாம இப்போ நிகழ்ச்சிக்கு போகலாம்...
ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர், யுசகு மேசவா என்பவர், தன்னுடன் நிலவுக்கு பயணம் செய்ய ஒரு காதலி தேவை என அறிவிப்பு வெளியிட்டுருக்காரு.. 44 வயதுடைய நான், இதுவரையில் விரும்பியபடி தான் வாழ்ந்து வருகிறேன். ஆனால் தற்போது தனிமை மற்றும் வெறுமையின் உணர்வுகள் என் மீது படரத் தொடங்கியுள்ளது. நான் நினைப்பதெல்லாம், நான் நேசிக்க ஒரு பெண் தேவை. நிலவுக்கு என்னுடன் வர ஒரு காதலி தேவை. அதற்கு 20 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள், ஜனவரி 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களில் ஒருவரை மார்ச் இறுதிக்குள் தேர்வு செய்வேன். நிலவுக்கு பயணம் செய்யும் முதல் பெண்ணாக நீங்கள் ஏன் இருக்கக்கூடாது?. இவ்வாறு அவர் பதிவிட்டிருக்காரு..
Hai guys - நடிகர்களின் சம்பளம் இதைப்போலயாம்.... கமல் புது விளக்கம் குடுக்குறாருப்பு...
ரொம்ப ஓவராத்தான் போறாங்க
வெற்றிய தூரமா வச்சு ரசிக்கலாம், கிட்டக்கா கொண்டு வந்தா அது நம்மள டேமேஜ் பண்ணிரும்னு, நடிகர் தனுஷ், அசுரன் பட 100வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் பேசியுள்ளார். யாரை எப்போ எங்கே வைக்கணுங்கிறது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும் என அவர் மேலும் சொன்னாரு...
100 % உண்மை சகோ...
'தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, 'ஜிசாட் - 30' செயற்கைக் கோள், வரும், 17ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்' என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான 'இஸ்ரோ' தெரிவித்துள்ளது. இம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:தென் அமெரிக்காவில், பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ளது, ஏரியன் விண்வெளி தளம். இங்கிருந்து, 'ஜிசாட் - 30' மற்றும் இடுல்சாட் நிறுவனத்தின், 'இடுல்சாட் கோனக்ட்' செயற்கைக் கோள்களுடன், 'ஏரியன் - 5' ராக்கெட், வரும், 17ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
வாழ்த்துக்கள் இஸ்ரோ..
உலகத்தில் எத்தனையோ திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆனால், உலகமெங்கும் உள்ள தமிழர்கள் எல்லாம் பரம்பரையாக, பாரம்பரியமாக கொண்டாடி வரும் திருவிழா 'தமிழர் திருவிழா' எனும் 'பொங்கல் திருவிழா'.
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் நண்பர்களே..
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நான்கு நாட்களில், சென்னையில் இருந்து, அரசு பஸ்களில், 5.75 லட்சம் பேர், சொந்த ஊர்களுக்கு போயிருக்காங்களாம்..
நல்லா என்சாய் பண்ணுங்க..
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம்...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.