Advertisment

முட்டாள் தனமான நடவடிக்கை 7 ஆண்டுகளுக்குப் பிறகு வாபஸ்: ப.சிதம்பரம்

கறுப்பு பணத்தை வெளிக்கொண்டுவர ரூ.2000 நோட்டுகளின் அறிமுகம் உதவும் என்ற வாதம் முறியடிக்கப்பட்டது, ஆகையால் தான் வாபஸ் பெறப்படுகிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
pa chidambaram

தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில், ரூ.2000 நோட்டுகளை மக்கள் மாற்ற செல்லும்போது எந்த அடையாளமும் படிவங்களும் சான்றுகளும் தேவையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisment

கறுப்பு பணத்தை வெளிக்கொண்டுவர ரூ.2000 நோட்டுகளின் அறிமுகம் உதவும் என்ற வாதம் முறியடிக்கப்பட்டது, ஆகையால் தான் வாபஸ் பெறப்படுகிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதைப்பற்றி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, "ரூ.2000 நோட்டுகளை மாற்ற எந்த அடையாளமும் படிவங்களும் சான்றுகளும் தேவையில்லை என்று வங்கிகள் தெளிவுபடுத்தியுள்ளன. கறுப்பு பணத்தை வெளிக்கொணரவே ரூ.2000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்ற பாஜகவின் வாதம் முறியடிக்கப்பட்டது.

சாதாரண மக்களிடம் ரூ.2000 நோட்டுகள் இல்லை. 2016ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அவர்கள் அதைத் தவிர்த்துவிட்டனர். தினசரி சில்லறை பரிமாற்றத்திற்கு அவை பயனற்றவை. அப்படியென்றால் ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தியது யார்? என்பது உங்களுக்கே தெரியும்.

கறுப்பு பணத்தை பதுக்குவோருக்கு ரூ.2000 நோட்டு எளிதாக உதவியது. ரூ.2000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தங்கள் நோட்டுகளை மாற்ற சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. கறுப்பு பணத்தை வேரறுக்கும் அரசின் குறிக்கோளுக்கு இவ்வளவுதான் காரணம். 2016ல் ரூ.2000 நோட்டு அறிமுகம் ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வாபஸ் பெறப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்", என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment