scorecardresearch

தாய், தந்தைக்கு சல்யூட் அடித்து பதவியேற்ற போலீஸ் எஸ்.பி: நெகிழ்ச்சி காட்சிகள்

கன்னியாகுமாரி மாவட்டத்தின் 52வது போலீஸ் எஸ்.பி-யாக பொறுப்பேற்றுக்கொண்ட ஐ.பி.எஸ் அதிகாரி ஹரி கிரண் பிரசாத் தாய், தந்தைக்கு சல்யூட் அடித்து பதவியேற்றுக்கொண்ட வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய், தந்தைக்கு சல்யூட் அடித்து பதவியேற்ற போலீஸ் எஸ்.பி: நெகிழ்ச்சி காட்சிகள்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பத்ரி நாராயணன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஹரி கிரண் பிரசாத் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, ஐ.பி.எஸ் அதிகாரியான ஹரி கிரண் பிரசாத் கண்ணியாகுமரி மாவட்டத்தின் 52வது காவல் கண்காணிப்பாளராக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்ப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக, ஹரி கிரண் பிரசாத் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தனது தாய், தந்தைக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தி போலீஸ் எஸ்பி இருக்கையில் அமர்ந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பதவியேற்ற ஹரி கிரண் பிரசாத், தனது தாய், தந்தைக்கு சல்யூட் அடித்து பதவியேற்றுக்கொண்ட நிகழ்வு போலீசார் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரி கிரண் பிரசாத் தாய் தந்தைக்கு சல்யூட் அடித்து பதவியேற்று இருக்கையில் அமர்ந்த வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பலரும் கன்னியாகுமரி மாவட்ட புதிய போலீஸ் எஸ்.பி ஹரி கிரண் பிரசாத்துக்கு வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Hari kiran prasad ips take charge as kanyakumari sp after salute to his parent