scorecardresearch

இந்த முறை ரூ.100 கோடி; நடமாடும் நகைக் கடை ஹரி நாடார் மீண்டும் கைது

ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக ஹரி நாடார் ஏமாற்றிவிட்டதாக இஸ்லாயில், பஷீர் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.

Hari Nadar arrested again
நடமாடும் நகைக் கடை ஹரி நாடார்.

நடமாடும் நகைக் கடை ஹரி நாடார் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கோபால கிருஷ்ணன் என்ற ஹரி நாடார்.
40 வயதான இவர் நடமாடும் நகைக் கடை போன்று வலம் வந்தார். இவர் மீது கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த வெங்கட்ராம சாஸ்திரி என்பவர் ரூ.16 கோடி வாங்கி மோசடி செய்ததாக புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் இவரை கைது செய்து பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்த நடிகை விஜய லட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் மீது வணிகர்களான இஸ்லாயில் மற்றும் பஷீர் ஆகியோர் ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக ரூ.1.5 கோடியை மோசடி செய்துவிட்டார் எனப் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் ஹரி நாடார் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார், 38 ஆயிரம் வாக்குகள் பெற்று திமுக முன்னாள் அமைச்சரின் தோல்விக்கு காரணமானார்.
தேர்தலின்போது அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது நினைவு கூரத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Hari nadar arrested again

Best of Express