Advertisment

‘சிறை வாழ்க்கை நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது’ ஜாமீனில் வெளியே வந்த ஹரி நாடார் முதல் பேட்டி

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, 34 மாதங்கள் சிறையில் இருந்த ஹரி நாடார், சனிக்கிழமை ஜாமீனில் வெளியே வந்தார். சிறைவாழ்க்கை தனக்கு நிறை கற்றுக் கொடுத்திருக்கிறது என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
Hari Nadar 1

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, 34 மாதங்கள் சிறையில் இருந்த ஹரி நாடார், சனிக்கிழமை ஜாமீனில் வெளியே வந்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, 34 மாதங்கள் சிறையில் இருந்த ஹரி நாடார், சனிக்கிழமை ஜாமீனில் வெளியே வந்தார். சிறைவாழ்க்கை தனக்கு நிறை கற்றுக் கொடுத்திருக்கிறது என்றும் ஆதரவாக இருந்த அவருடைய மனைவிக்கு நன்றி தெரிவித்தார். 

Advertisment

உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்துகொண்டு வலம் வந்ததன் மூலம் நடமாடும் நகைக்கடை என்று அறியப்பட்டவர்தான் ஹரி நாடார். நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மேல இலந்தைக் குளம் கிராமத்தை சேர்ந்தவர்தான் ஹரி நாடார். இவர் நீண்ட தலைமுடியுடன், கழுத்திலும் கைகளிலும் சுமார் 3 கிலோ தங்கநகைகளை அணிந்தபடி வலம் வந்தவர் ஹரி நாடார். இதனாலேயே அவர் ஊடகங்களில் அதிக கவனம் பெற்றார். நடமாடு நகைக்கடை என்று அழைக்கப்பட்டார். இவர் ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை என்ற அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். 

சென்னையில் ஃபைனான்சியராக இருந்த ஹரி நாடார், 2021 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கு ஆதரவாக ராக்கெட் ராஜா ஹெலிகாப்டரில் வந்து வாக்குச் சேகரித்தார். தேர்தலில் ஹரி நாடார் 37,726 வாக்குகள் பெற்றதன் மூலம் அரசியலிலும் பெரிய கவனம் பெற்றார்.

இந்த சூழலில்தான், ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2021 மே மாதம் பண மோசடி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் கர்நாடக போலீஸார் ஹரி நாடாரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைத்தனர்.

மோசடி மற்றும் மிரட்டல் வழக்கில் கைதாகி சுமார் 34 மாதங்கள் சிறையில் இருந்த ஹரி நாடார், சனிக்கிழமை (02.03.2024) ஜாமீனில் வெளியே வந்தார்.

ஹரி நாடார் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கழுத்தில் கைகளில் கிலோ கணக்கில் அணிந்திருந்த தங்கை நகைகள் இல்லாமல், நெற்றியில் திருநீருடன் காரில் இருந்த படி முதல்  ஹரி நாடார் தனது முதல் பேட்டியைக் கொடுத்திருக்கிறார். அதில், 2 ஆண்டுகள் 10 மாதம் கால சிறை வாழ்க்கை தனக்கு நிறையக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்றும் சிறையில் இருந்து வெளியே வர தனக்கு ஆதரவாக நின்ற மனைவிக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், சிறையில் இருந்த காலத்தில் துரோகிகள் யார், நண்பர்கள் யார் என்று தன்னால் புரிந்துகொள்ள முடிந்தது என்று ஹரி நடார் கூறியுள்ளார்.

சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்திருக்கும் ஹரி நாடார் தனது முதல் பேட்டியில் கூறியிருப்பதாவது: “கடந்த 2 ஆண்டுகள் 10 மாதம் கழித்து இந்த ஹரி நாடார் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து இன்று விடுதலையாகி வந்திருக்கிறேன். அதுவும் ஒரு சாதாரண மோசடி வழக்குக்கு 30 நாள் 60 நாட்களில் பெயில் கொடுக்கக்கூடிய நீதிமன்றங்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் 2 ஆண்டுகள் 10 மாதம் காலதாமதப்படுத்தி இந்த ஜாமினை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். 

நான் கைது செய்யப்பட்டு சிறைக்குப் போன நாளிலிருந்து இன்று விடுதலையாகி வெளியே வரக்கூடிய இந்த நிமிடம் வரைக்கும், என்னுடைய ஜாமீனுக்காக தொடர்ந்து பல இன்னல்களை எல்லாம் தாண்டி பல அவப்பெயர்களை எல்லாம் கடந்து பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு, பல வகைகளில் பல பல மிரட்டல்களை எல்லாம் எதிர்த்து என்னுடைய அன்பு மனைவி மஞ்சு எனக்காக நான் சிறைக்கு சென்ற நாள் முதல் இன்று வெளிவரும் நாள் வரைக்கும் எனக்காக கஷ்டப்பட்டு பாடுபட்டார்கள். அதற்கு முதலில் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியையும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

அதே நேரத்தில், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ரத்த உறவுகள் பலர், வேறு மாதிரி காரணங்களை சொல்லி எனக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதிலாக இருக்கட்டும் அல்லது நான் வெளிவரக் கூடாது சிறைக்குள்ளே இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு கூட பலர் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் சமுதாய உணர்வோடு ஹரி நாடார் எப்படிப்பட்டவர், ஹரி நாடார் சமுதாயத்துக்கு என்ன செய்தார் என்பதை எல்லாம் தெரிந்த சமுதாய நல்ல உள்ளங்கள் நான் வெளிவர வேண்டும் என்று உண்மையிலேயே உணர்பூர்வமாக நின்றார்கள். அவர்களுக்கும் இந்நேரத்தில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு சிறையில் இருந்து வெளி வருவதற்காக ஜாமீன் எடுப்பதற்கு முயற்சி செய்த அத்தனை வழக்கறிஞர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.  

ஆலங்குளம் தொகுதியில் 37 ஆயிரத்து 726 வாக்குகள் ஹரி நாடார் எடுத்துவிட்டார் என்று தெரிந்த இரண்டாவது நாள் என்னை கைது செய்தார்கள். இது அரசியல் சூழ்ச்சி என்பதும் இது எந்த மாதிரியானது என்பதும் எல்லாருக்கும் தெரியும் .அதை விரிவாக ஒரு நாளைக்கு ஒரு பேட்டியில் எல்லாருக்கும் நானே தன்னிச்சையாக கொடுப்பேன். இந்த புகாரை அளிப்பதற்கு காரணமாக இருந்தவர்களும் சரி, இந்த புகாரை அளித்தவருக்கும் சரி, இந்த நேரத்தில் நான் நன்றி சொல்கிறேன். காரணம் என்னவென்றால், இந்த 2 ஆண்டுகள் 10 மாத கால சிறை வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள், யார் என் கூட பணத்திற்காக பழகினார்கள், யார் உண்மையாக பழகினார்கள், பணத்துக்காக வேலை செய்தவர்கள் எந்த மாதிரி, நட்புக்கு துரோகம் செய்தவர்கள் எந்த மாதிரி , நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் எத்தனை பேர், அந்த மாதிரி நிறைய பேர்களை இந்த சிறை வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. எல்லாமே ஒரு படிப்பினை தான். இன்னும் ஒரு படி மேல தான் நான் சமுதாயப் பணி ஆற்றுவேன். எனக்கு 37 ஆயிரத்து 726 வாக்களித்த ஆலங்குளம் தொகுதி நாடார் சமுதாய சொந்தங்களுக்கும் ஆலங்குளம் தொகுதி வாக்காளர் பெருமக்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் கூற கடமைப்பட்டிருக்கிறேன். 

சட்ட ரீதியா சில விஷயங்களை கர்நாடக மாநிலத்தில் இருந்து செய்யச் சொல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அந்த உத்தரவுகளை இந்த ஒரு வாரத்தில் சரி செய்து விட்டு உடனடியாக ஆலங்குளம் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வது தான் என்னுடைய முதல் கடமை என்று இந்த நேரத்தில் கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை சிறைக்கு சென்ற நாள் முதல் நான் வெளிவரக்கூடிய இந்த நிமிஷம் வரைக்கும் எனக்காக எவ்வளவோ கஷ்டங்களை எல்லாம் தாண்டி எனக்காக கூட நின்ற என் மனைவி, திரும்பத் திரும்ப இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கு அவ்வளவு கஷ்டத்தை கொடுத்திருக்கிறார்கள். அதை என்னைச் சுற்றி இருந்த வட்டமே கொடுத்திருக்கிறார்கள். அந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி வேற ஒரு நாட்டுப் பெண் மலேசியா நாட்டு பெண்ணாக இருந்தால்கூட, ஒரு இந்தியனை காப்பாற்ற வேண்டும் என்று கஷ்ட காலத்தில் அவர் கூட நிற்க வேண்டும், நம்ம கணவருக்கு கூட பழகியவர்களே பல பேர் துரோகம் செய்து விட்டார்களே என்பதை எல்லாம் பார்த்து எனக்கு பக்க பலமாக நின்று எனக்கு உதவி செய்த அன்பு மனைவிக்கும் அவர் குடும்பத்திற்கும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Hari Nadar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment