தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில்
சுயேட்சை வேட்பாளராக ஹரி நாடார் போட்டியிட்டு 37,726 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த வேட்பாளர் ஹரி நாடாரை பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் ஒரு குற்ற வழக்கில் கைது செய்து பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த ஜமாலுதீன் என்ற தொழிலதிபர் ஹரி நாடார் மீது திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் மோசடி புகார் ஒன்று அளித்தார். அவர் புகார் அளித்து 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்ட மத்திய குற்றப்பிரிவு (CCB)உதவி ஆணையாளர் ஆவுடையப்பன் கடந்த மாதம் இந்த வழக்கு தொடர்பாக ஹரி நாடார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 23 மாதங்களாக விசாரணை கைதியாக சிறையில் இருந்து வரும் ஹரி நாடார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் நாளை செவ்வாய்க்கிழமை (18.04.23) காலை 10 மணியளவில் ஹரி நாடாரை திருநெல்வேலி மாவட்ட மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார், உதவி ஆணையாளர் ஆவுடையப்பன் தலைமையில் திருநெல்வேலி JM-1 குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil