Advertisment

சிறையில் இருந்து வீடியோ பேட்டி? 'நடமாடும் நகைக் கடை' ஹரிநாடார் அடுத்த சர்ச்சை

என்னுடைய உழைப்பில், சம்பாத்தியத்தில் உருவாக்கிய கட்சியிலிருந்து என்னை நீக்குவதற்கான அதிகாரம் ராக்கெட் ராஜாவுக்கு கிடையாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெங்களூரு சிறையில் நிர்வாணமாக நிறுத்தி வீடியோ... 'நடமாடும் நகைக்கடை' ஹரி நாடார் கதறல்

தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை எனப் பெயர் எடுத்தவர் ஹரி நாடார். இவர் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்.

Advertisment

ஏற்கனவே மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் உள்ள ஹரிநாடார், நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறைக்குப் போன சில நாட்களிலேயே அவரது முதல் மனைவி ஷாலினிக்கும், இரண்டாவது மனைவி மஞ்சுவுக்கும் இடையே சண்டை உருவானது. சமூக வலைதளத்தில் இருவரும் ஹரிநாடார் தன்னுடைய கணவர் என வாதங்களை முன்னிறுத்தி வருவதால் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஹரி நாடார் நீக்கப்படுகிறார் என கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அறிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பதவி நீக்கத்தால் அதிருப்தியில் இருந்த ஹரி நாடார், தற்போது சிறையில் இருந்தபடியே ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

ஷாலினி கூட வாழ பிடிக்கல

அவர் பேசியதாவது, என்னோடு பெருக்கு கலங்கம் ஏற்படுத்தவே ஷாலினி சில கும்பலுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். ஷாலினி கூட வாழ பிடிக்காம தான், விவகாரத்துக்கு அப்ளை செய்தேன். மஞ்சு கூட தான் மனப்பூர்வமாக கணவன் - மனைவியாக வாழ தயாராக இருக்கிறேன்.

ஷாலினி ஒரு அனாதைனு நினைச்சி தான் திருமணம் செய்தேன். ஆனால்,எங்களுக்கு மகன் பிறந்தபிறகு, அவளது நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டது. ஷாலினிக்கு நிறைய சொந்தங்கள் உள்ளது. சமூக வலைதளத்துல ஷாலின் பேசுவது எல்லாமே நடிப்பு தான்.

ராக்கெட் ராஜாவுக்கு அதிகாரம் இல்லை

பனங்காட்டுப் படை கட்சியை நாடார் சமூக மக்களுக்கு நல்லது செய்வதற்காக, என்னோட உழைப்புல என்னோட சம்பாத்தியத்துல அவர் நல்லது செய்வாருனு நம்பிக்கையில ராக்கெட் ராஜாவ தலைவராக அமர்த்தி, கட்சியை நான் தான் உருவாக்கினேன்.

கட்சியை உருவாக்கின என்னைய நீக்குவதற்கான அதிகாரம் ராக்கெட் ராஜாவுக்கோ யாருக்குமே கிடையாது. ராக்கெட் ராஜாவுக்கு கட்சி வேணும்னா அவரது சொந்த காசு, உழைப்ப போட்டு கட்சி உருவாக்கனும்" என தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Hari Nadar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment