Advertisment

மக்களை அச்சுறுத்திய அரிகொம்பன் யானை : மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

தேனி, கம்பம் பகுதியில் சுற்றி திறிந்த அரிக்கொம்பன் என்ற யானை 4 மயக்க ஊரிகள் செலுத்தி பிடிக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Arikomban elephant in Kanyakumari

மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

தேனி, கம்பம்  பகுதியில்  சுற்றி திறிந்த அரிக்கொம்பன் என்ற யானை 4 மயக்க ஊரிகள் செலுத்தி பிடிக்கப்பட்டது.

Advertisment

கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களை அச்சுறுத்தி 10-க்கும் மேற்பட்ட நபர்களை, கொன்றது அரிகொம்பன். இந்நிலையில் கடந்த மாதம் கேரளா வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானையின் உதவியோடு பிடித்தனர். இந்நிலையில் இந்த யானை தமிழக -கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் விடப்பட்டது.

ஆனால் மீண்டும் இந்த யானை தமிழகப் பகுதிக்குள் நுழைந்தது. மேகமலை, இரவங்கலாறு பகுதிகளில் வளம் வந்தது. இதன் காரணமாக மேகமலைக்கு பொதுமக்கள் சுற்றுலா செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அரிகொம்பன் யானை கடந்த சில தினங்களுக்கு  முன்பு கம்பம் நகருக்குள் நுழைந்து பொது மக்களை அச்சுறுதியது. அப்போது காவலாளி ஒருவரை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை யானையை பிடிக்கும் திடத்தை வனத்துறையினர் தொடங்கினர். நேற்று நள்ளிரவு இரண்டு மணி அளவில் கம்பத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று கும்கி யானைகளை தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை பகுதிக்கு வனத்துறையினர் அழைத்து வந்தனர். இதையடுத்து இன்று அதிகாலை 4 மணிக்கு, அரிக்கொம்பன் யானைக்கு மருத்துவர்கள் 2 முறை  மயக்க ஊசி செலுத்தி அதனை மயக்கம் அடைய செய்தனர்.  இதனையடுத்து 3 கும்கி யானை மற்றும்  ஜேசிபி இயந்திரத்தின் உதவிகளுடன் அரிகொம்பன் யானையை அதற்குரிய வாகனத்தில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விதிக்கபட்ட 144 தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment