/tamil-ie/media/media_files/uploads/2023/04/harman.jpg)
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துனை நிறுவனமான ஹார்மன் (Harman) நிறுவனம், அதன் நிறுவன கிளையை சென்னையில் தொடங்கி உள்ளது.
இந்த நிறுவனத்தின் சென்னை கிளையானது இன்னும் சில மாதங்களில் முழுமையாக இயங்கத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. 200 ஊழியர்களை கொண்டு இந்த நிறுவனம் முதல் ஆண்டில் இயங்க உள்ளது.
சென்னை, போரூரில் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வாகன பொறியியல் படித்த பொறியாளர்களை இந்நிறுவனம் பணியமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த துறையில் ஆராய்ச்சி செய்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஹார்மன் இந்திய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரதாப் தேவநாயகம் கூறுகையில் “உலக நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள வாகனங்கள் தொடர்பான எல்லா வசதிகளையும் வழங்கும் பணியை சென்னை கிளையில் செயல்படுத்த உள்ளோம். வாகனங்கள் தொடர்பான பொறியியலில் அடுத்தகட்டத்தை எட்டும் பணிகள் நடைபெறும். சென்னையில் இளம் திறமைகள் இருப்பதால், இந்த இடம் சரியான தேர்வாக இருக்கும்” என்று கூறினார்.
ஹார்மான் நிறுவனத்தின் இந்திய நிறுவனம் கார்களின் ஆடியோ, டெலிமேட்டிக்ஸ், விமான ஓட்டியின் அறையை உருவாக்கும் வசதி ஆகியவற்றை மற்ற நிறுவனங்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக டாடா, மாருதி ஆகிய நிறுவனங்களும் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடதக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.