ஆசிய குதிரையேற்றப் போட்டி: கோவையில் பயிற்சி பெற்ற தமிழக மாணவர் ஹர்ஷித் தேர்வு

சர்வதேச அளவில் பிரபலமான குதிரை உயரம் தாண்டுதல் போட்டி, "யங் ஏசியன் சாம்பியன்ஷிப்" என்ற பெயரில் இந்த மாதம் பஹ்ரைன் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான 'ஷோ ஜம்பிங்' பிரிவுக்குத் திருப்பூரைச் சேர்ந்த மாணவர் ஹர்ஷித் தேர்வாகியுள்ளார்.

சர்வதேச அளவில் பிரபலமான குதிரை உயரம் தாண்டுதல் போட்டி, "யங் ஏசியன் சாம்பியன்ஷிப்" என்ற பெயரில் இந்த மாதம் பஹ்ரைன் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான 'ஷோ ஜம்பிங்' பிரிவுக்குத் திருப்பூரைச் சேர்ந்த மாணவர் ஹர்ஷித் தேர்வாகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Asian Equestrian Competition

ஆசிய குதிரையேற்றப் போட்டி: கோவையில் பயிற்சி பெற்ற தமிழக மாணவர் ஹர்ஷித் தேர்வு

சர்வதேச அளவில் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான குதிரை உயரம் தாண்டுதல் போட்டி, ஆசிய அளவில் இந்த மாதம் (அக்.) பஹ்ரைன் நாட்டில் நடைபெற உள்ளது. உலக நாடுகளைச் சேர்ந்த குதிரையேற்ற வீரர்கள் கலந்துகொள்ளும் இப்போட்டிக்கு, கோவையில் பயிற்சி பெற்று வரும் தமிழக மாணவர் ஹர்ஷித் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.

Advertisment

பஹ்ரைனில் நடைபெறவுள்ள "யங் ஏசியன் சாம்பியன்ஷிப்" என்ற ஆசிய அளவிலான போட்டியில், 18 வயதிற்கு உட்பட்டோருக்கான 'ஷோ ஜம்பிங்' (Show Jumping) குதிரையேற்றப் பிரிவில் திருப்பூரைச் சேர்ந்த மாணவர் ஹர்ஷித் தேர்வாகியுள்ளார். இந்தப் போட்டிக்கு இந்தியா சார்பில் மொத்தம் 4 பேர் மட்டுமே தேர்வாகியுள்ள நிலையில், தென்னிந்திய அளவில் தேர்வாகி இருக்கும் ஒரே வீரர் ஹர்ஷித் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷித் கோவையில் உள்ள 'கோவை ஸ்டேபிள்ஸ்' பயிற்சி மையத்தில் நீண்ட காலமாகப் பயிற்சி பெற்று வருகிறார். போட்டி குறித்து ஹர்ஷித் அவரது பயிற்சியாளரும், கோவை ஸ்டேபிள்ஸ் குதிரையேற்ற பயிற்சி மையத்தின் இயக்குநருமான சரவணன் பேசுகையில், வரும் 24-ம் தேதி பஹ்ரைனில் நடக்கும் போட்டியில் இந்தியா சார்பாகத் தென்னிந்திய அளவில் ஒரே வீரராக கலந்துகொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தனர்.

காளப்பட்டி பகுதியில் உள்ள இந்த மையத்தில் பயிற்சி பெற்று வரும் ஹர்ஷித், ஏற்கனவே தேசிய மற்றும் சர்வதேச குதிரையேற்றப் போட்டிகளில் பங்கேற்று அனுபவம் பெற்றவர் என்றும் பயிற்சியாளர் சரவணன் குறிப்பிட்டார். இந்த அரிய தேர்வின் மூலம், ஹர்ஷித் ஆசிய அளவில் இந்தியாவுக்காகப் பெருமை சேர்க்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment
Advertisements

செய்தி: பி. ரஹ்மான், கோவை

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: