தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் மாற்றம்: யார் இந்த ஹசீனா சையத்?

தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Haseena syed.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழக மகளிர் காங்கிரசின் புதிய தலைவராக ஹசீனா சையத்தை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில்,"தமிழக மகளிர் காங்கிரசின் புதிய தலைவராக ஹசீனா சையத்தை நியமித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரவிட்டுள்ளார்.  இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்டுள்ளார். இதையடுத்து தற்போது மகிளா காங்கிரஸுக்கு புதிய  தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

ஹசீனா சையத் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். டி.வி விவாத நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் சார்பில் பங்கேற்று கருத்துகளை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamilnadu Congress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: